/* */

தனியார் இடத்தில் கொடிக் கம்பம்: இருதரப்பினரிடையே மோதல்

வெங்கக்கல்பட்டியில் தனியார் இடத்தில் தமிழ்புலிகள் அமைப்பினர் கொடி கம்பம் அமைத்ததால் இருதரப்பினரிடையே மோதல் ஏற்படும் நிலை.

HIGHLIGHTS

தனியார் இடத்தில் கொடிக் கம்பம்: இருதரப்பினரிடையே மோதல்
X

தனியார் இடத்தில் கொடி கம்பம் நடப்பட்டது தொடர்பாக இரு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பாக காணப்படும் வெங்ககல்பட்டி பகுதி.

கரூர் வெங்கக்கல்பட்டியில் நேற்று தமிழ் புலிகள் கட்சியின் சார்பில் அந்தக் கட்சியின் கொடி ஏற்றப்பட்டது. அந்த கொடி ஏற்றப்பட்ட இடம் தனி நபருக்கு சொந்தமானது என கூறி தனி நபரும், அவர் சார்ந்த சமுதாயத்தினரும் கொடியை அகற்ற வேண்டும் என இன்று பிரச்னையில் ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் புலிகள் அமைப்பினர், கொடியை அகற்றக்கூடாது என திரண்டனர். இருதரப்பை சேர்ந்தவர்களும் அதிக அளவில் திரண்டதால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

சம்பவ இடத்தில் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள் தேவராஜ், கீதாஞ்சலி மற்றும் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணி ஆகியோர் இருதரப்பினரையும் அமைதிப்படுத்தினர். இந்நிலையில், தனியார் இடத்தில் வைக்கப்பட்டு இருந்த கட்சி கொடியை அகற்றுமாறு கோட்டாட்சியர் பாலசுப்ரமணியம் உத்தரவிட்டார். இதையடுத்து அந்த இடத்தில் தமிழ் புலிகள் கட்சி கொடியை வருவாய் துறையினர் அகற்றினர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழ்புலிகள் அமைப்பினர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த இடமே சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. சாலை மறியலில் ஈடுபட்ட சுமார் 10 க்கும் மேற்பட்டோரை போலீசாரால் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களை அழைத்துச் சென்ற காவல் துறை வேனை பெண்கள் மறித்து முழக்கம் எழுப்பினர்.

Updated On: 18 Aug 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  2. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  3. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  4. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  5. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  6. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  7. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  8. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
  9. லைஃப்ஸ்டைல்
    ‘வாழ்க்கை என்பது மனிதர்களின் அனுபவங்களின் தொகுப்புதானே தவிர...
  10. காங்கேயம்
    வெள்ளக்கோவிலில் பல ஆண்டுகளாக செயல்படாத போக்குவரத்து சிக்னல்