/* */

பல துறைகளில் கவனம் ஈர்த்த எளியோர்க்கும், சாமானியர்க்கும் விருது

ஒவ்வொரு நாளும் உழைக்கக்கூடிய சாமானிய மக்களுக்கு ஆற்றல் அமைப்பின் மூலமாக விருது வழங்குகின்றனர்.

HIGHLIGHTS

பல துறைகளில் கவனம் ஈர்த்த எளியோர்க்கும்,  சாமானியர்க்கும் விருது
X

விருது வழங்கும் நடிகர் பார்தீபன் மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி. 

கரூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற ஆற்றல் விருதுகள் 2021 ஆம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் நிறுவனர் ஆற்றல் சிவகுமார் தலைமை வகித்தார். எழுத்தாளர் இமயம் சாகித்ய அகாடமி 2020, விருதுகள் வழங்கி வாழ்த்துரை நிகழ்த்தினார். இயக்குனரும், திரைப்பட நடிகருமான பார்த்திபன், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலும் இந்நிகழ்ச்சியில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசுகையில், ஒவ்வொரு நாளும் உழைக்கக்கூடிய சாமானிய மக்களுக்கு ஆற்றல் அமைப்பின் மூலமாக விருது வழங்குகின்றனர். பொதுவாக ஒருவர் வாழ்ந்த நிலையை அடைகின்றார்கள். இந்த விருது கிடைப்பதற்கு உறுதுணையாக இருந்தார்களோ அவர்களுக்கான உழைக்கக்கூடிய மக்களுக்கு விருதுகளை வழங்கி பெருமை படுத்தி இருக்கின்றனர் என்று வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து திரைப்பட நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் பேசுகையில் தினந்தோறும் கூலி வேலை செய்யும், உழைக்கும் மக்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் விருது அளிக்கும் ஆற்றல் அமைப்பிற்கு முன்னதாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைக்கு பார்க்க போனோம் என்றால் சொந்தக் உறவினர்கள் பிறந்து விட்டார்கள் என்றால் கூட உடனே காரியத்தை முடித்து விட்டு கிளம்பி விடுவார்கள். அப்பாவாக இருந்தாலும் சரி அம்மாவாக இருந்தாலும் சரி அப்படிப்பட்ட இவ்வுலகத்தில் மரியாதை இல்லாத காலத்தில் சம்பந்தமே இல்லாத யாரோ ஒருவர் மற்ற உயிர்கள் மீது அக்கறை காட்டும் மனிதர்கள் மீதும் மனிதாபிமானம் மிக்க இந்த மனிதர்களுக்கு நான் ஒரு புத்தகம் எழுதி இருக்கிறேன்.

அதில் அன்னை தெரசாவை பற்றி அதில் கருவுற்ற தாய் ஆகாமல் கருணைவுற்றதால் அகில உலகத்திற்கும் அன்னை ஆகிறேன். இதுதான் அந்தக் கவிதை. ஒரு மனிதன் இரண்டு மனிதன் கருமையாக இருந்தால் பரவாயில்லை. ஆனால் ஒருவருக்குப் பின்னால் இருப்பதால் இதற்குப் பெயர் கரூர் இல்லை, கருனை ஊர் என்று கூட சொல்லலாம். இந்த ஊர் செய்த நல்ல காரியத்தை கௌரவப்படுத்தும் விதமாக இந்த ஆற்றல் அமைப்பு விருது கொடுத்து கௌரவ படுத்துவது நிறுவனர் சிவக்குமாருக்கும் அவரை சார்ந்த நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து ஆற்றல் விருதுகள் 2021 - ஆம் ஆண்டிற்கான விருதுகளை வழங்கி கௌரவித்தனர். இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Updated On: 29 Dec 2021 4:45 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!