/* */

கரூர் மாவட்டத்தில் ரூ.4.55 கோடி மதிப்பிலான திட்டப் பணிகள் தொடக்கம்

கரூர் மாவட்டத்தில் ரூ.4.55 கோடி மதிப்பீட்டிலான மக்கள் நலத் திட்டங்களை மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

கரூர் மாவட்டத்தில் ரூ.4.55 கோடி மதிப்பிலான திட்டப் பணிகள் தொடக்கம்
X

கரூர் நகராட்சியில் புதிய வகுப்பறை கட்டிடத்தை மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி திறந்து வைத்தார்.

கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், மின்னாம்பள்ளி ஊராட்சியில் ரூ. 4.55 கோடி மதிப்பீட்டில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, சமுதாயக்கூடம் ஆகியவற்றை மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜி திறந்து வைத்தார்.நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தலைமை தாங்கினார்.

தொடர்ந்து கரூர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கரூர் வைஸ்யா வங்கி மற்றும் கரூர் டெக்ஸ் சிட்டி ரோட்டரி கிளப் சமூக பொறுப்புணர்வு நிதியில் பதினைந்து வகுப்பறைகள், ஆய்வகங்கள் மற்றும் ஆசிரியர் ஓய்வு அறைகளுடன் கூடிய நவீன வகுப்பறை கட்டிடத்தை ஆகியவற்றையும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி திறந்து தொடங்கிவைத்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சிகளில் நகராட்சி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 24 Oct 2021 2:15 PM GMT

Related News