/* */

புதுக்கடை அருகே சாலை விபத்தில் இளைஞர் உயிரிழப்பு: இருவர் படுகாயம்

குமரி மாவட்டம் புதுக்கடை அருகே சாலையை கடக்க முயன்ற நபரால் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலி, இருவர் படுகாயம் அடைந்தனர்.

HIGHLIGHTS

புதுக்கடை அருகே சாலை விபத்தில் இளைஞர் உயிரிழப்பு: இருவர் படுகாயம்
X

சாலை விபத்தில் உயிரிழந்த எட்வின் ஜிஜோ.

கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே அம்சி என்ற பகுதியை சேர்ந்தவர் சுபின். இவரும் அதே பகுதியை சேர்ந்த இவரது நண்பனான எட்வின்ஜிஜோ (21), ஆகியோர் சேர்ந்து கருங்கலில் இருந்து புதுக்கடைக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தனர்.

சுபின் பைக்கை ஓட்டி வர எட்வின்ஜிஜோ பின்னால் இருந்து வந்துள்ளார். கருங்கல் புதுக்கடை சாலையில் வெள்ளையம்பலம் என்ற பகுதியில் இருவரும் வரும் போது அந்த பகுதியில் கடை நடத்தி வரும் ஒருவர் திடீரென சாலையை கடக்க முயன்றுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சுபின் அந்த நபர் மீது மோதாமல் இருக்க தனது பைக்கை வெட்டி திருப்பிய போது கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையை கடக்க முயற்சித்த நபர் மீது மோதி சாலையின் ஓரம் வைக்கப்பட்டிருந்த சிமெண்ட் கற்கள் மீது மோதி சாலையில் தூக்கி வீசப்பட்டது.

இதில் மூன்று பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மூன்று பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதில் பைக்கின் பின்னால் இருந்து வந்த எட்வின் ஜிஜோ சிகிட்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற இருவரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இந்த விபத்து குறித்த நெஞ்சை உறைய வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 12 April 2022 2:00 PM GMT

Related News