/* */

அத்தப்பூ கோலம், ஓணம் ஊஞ்சல் - குமரியில் ஓணம் பண்டிகை கோலாகல காெண்டாட்டம்

அத்தப்பூ கோலம், ஓணம் ஊஞ்சல் என குமரியில் ஓணம் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது.

HIGHLIGHTS

அத்தப்பூ கோலம், ஓணம் ஊஞ்சல் - குமரியில்  ஓணம் பண்டிகை கோலாகல காெண்டாட்டம்
X

தமிழக கேரள எல்லை பகுதியான குமரி மாவட்டத்தில் ஓணம் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

கேரள மக்களின் பாரம்பரிய பண்டிகையான ஓணம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தமிழக கேரள எல்லை பகுதியான குமரி மாவட்டத்திலும் ஓணம் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

கொரோனா கட்டுபாடுகள் அமலில் இருக்கும் நிலையில் பொது இடங்களில் நடத்தப்படும் கொண்டாட்டங்களை பொதுமக்கள் தவித்தனர்.

காலையிலேயே எழுந்து குளித்து முடித்து விட்டு புத்தாடைகள் அணிந்து அருகில் உள்ள கோவில்களுக்கு சென்று இறைவனை தரிசித்து ஓணப்பண்டிகையை கொண்டாடினர்.

தொடர்ந்து தங்கள் வீட்டின் முன் அத்தப்பூ கோலம் போட்டு, ஓணம் ஊஞ்சல் ஆடி ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.

மேலும் ஆறு சுவையுடன் கூடிய பல வகை உணவுகளை சமைத்து உறவினர்களுடன் அமர்ந்து உண்டு ஓணம் கொண்டாட்டத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

Updated On: 21 Aug 2021 1:37 PM GMT

Related News