கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 இளைஞர்கள் கைது

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பத்ரி நாராயணன் பொறுப்பேற்ற நாள் முதல் கஞ்சா விற்பனை, போதை பாக்குகள், புகையிலை உள்ளிட்ட போதை பொருட்களை சட்ட விரோதமாக விற்பவர்கள் மீது கடும் நசுடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 இளைஞர்கள் கைது
X

குமரி மாவட்டத்தில் போதை பொருட்கள் விற்பனை கும்பலின் செயல்பாடுகள் தற்போது பெருமளவில் குறைந்ததுள்ளது. இந்நிலையில் நாகர்கோவில் அருகே திருப்பதிசாரம் பகுதியில் ஆரல்வாய்மொழி போலீசார் ரோந்து சென்ற போது அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டு இருந்த நான்கு இளைஞர்களை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும், அவர்கள் அனைவரும் திருப்பதிசாரம் பகுதியை சேர்ந்த வன்னிய பெருமாள் (21), நாகராஜன் (31), சரண்ராஜ்(24) மற்றும் தளவாய் என்ற பாண்டியன்(22) என்பதும் தெரியவந்தது,

இதனை தொடர்ந்து இளைஞர்கள் நான்கு பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 2 கிலோ 800 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர், மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நான்கு பேரையும் சிறையில் அடைத்தனர்.

Updated On: 28 Jan 2021 1:15 PM GMT

Related News