/* */

ரூ. 3 கோடி ரூபாய் செலவில் தூர்வாரப்படும் மீன்பிடி துறைமுகம்

கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் துறைமுகத்தில் ரூ 3 கோடி ரூபாய் செலவில் தூர்வாரப்பட்டு வருகிறது.

HIGHLIGHTS

ரூ. 3 கோடி ரூபாய் செலவில் தூர்வாரப்படும் மீன்பிடி துறைமுகம்
X

குமரி சின்னமுட்டத்தில் 3 கோடியே 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து ராட்சத தூர்வாரும் கப்பல் மூலம் மணல்மேடுகள் அகற்றப்பட்டும் பணி நடைபெற்று வருகின்றன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மீன்பிடி துறைமுகங்களில் முக்கியமானதாக அமைகிறது சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம்,

இந்த மீன்பிடி துறைமுகத்தை தங்கு தளமாகக் கொண்டு 350க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறது.

இந்த துறைமுகத்தில் இருந்து அதிகாலை 5 மணிக்கு மீன்பிடிக்க செல்லும் விசைப்படகுகள் இரவு 9 மணிக்குள் கரை திரும்புவது வழக்கம்.

இதனிடையே துறைமுகத்தில் ஏராளமான படகுகள் நிறுத்தி வைப்பதால் இடநெருக்கடி ஏற்படுவதோடு, துறைமுகத்தில் குவிந்துள்ள மணல்மேடுகளை அகற்றினால் இட நெருக்கடி தீரும் என விசைப்படகு உரிமையாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இதனை அடுத்து தமிழக அரசு 3 கோடியே 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து ராட்சத தூர்வாரும் கப்பல் மூலம் மணல்மேடுகள் அகற்றப்பட்டும் பணி நடைபெற்று வருகின்றன.

Updated On: 25 Aug 2021 2:00 PM GMT

Related News