/* */

6 ஆண்டுகளுக்கு மேல் காதல்.. திருமணமாகி 7 மாதத்தில் தவிக்க விட்ட கணவன்..!

கன்னியாகுமரி மாவட்டத்தில் இளம்பெண்ணை தவிக்க விட்ட கணவன் - 7 மாதத்தில் கசப்பில் முடிந்த காதல் திருமணம்.

HIGHLIGHTS

6 ஆண்டுகளுக்கு மேல் காதல்.. திருமணமாகி 7 மாதத்தில் தவிக்க விட்ட கணவன்..!
X

ரதீஷ், பவசகிதா தம்பதிகள்

கன்னியாகுமரி மாவட்டம் மருங்கூர் அருகே குமாரபுரம் தோப்பூர் பகுதியை சேர்ந்தவர் பவசகிதா 23 வயதான இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ரதீஷ் (29) என்பவருக்கும் இடையே ஆறு வருடங்களுக்கு மேலாக காதல் இருந்து வந்துள்ளது.

இதனிடையே பவ சகிதாவிற்கு அவரது பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து அதன்படி கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது, இந்நிலையில் கடந்த நவம்பர் 19 ஆம் தேதி பவசகிதா மற்றும் ரதீஷ் ஆகியோர் வீட்டை விட்டு வெளியேறி ரதீஷின் சகோதரர் வீட்டில் வைத்து பவசகிதாவுக்கு தாலி கட்டியதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து தேனியில் உள்ள ரதீஷின் மற்றொரு சகோதரர் வீட்டிற்கு சென்று தம்பதிகள் அவர் மூலமாக ரதீஷ் குடுபத்தினரின் சம்மதம் பெற்று இருவரும் அவர்களது சொந்த ஊரான மருங்கூர் பகுதியில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து குடும்பம் நடத்தியதாக கூறப்படுகிறது.

இதனிடையே 7 மாதமாக எந்த பிரச்சனையும் இன்றி ரதீஷ், பவ சகிதா தம்பதிகள் குடும்பம் நடத்தி வந்த நிலையில் ரதீஷின் அம்மாவிற்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டதை அறிந்து சென்ற ரதீஷ் திரும்பி வரவில்லை.

இந்நிலையில் பவ சகிதா தனது தாயை அழைத்து கொண்டு ரதீஷ் வீட்டிற்கு சென்ற போது ரதீஷின் அம்மா மற்றும் அவரது சகோதரி ஆகியோர் வரதட்சணை கேட்டு தாக்கியதாகவும் தலைமுடியை பிடித்து கொடுமை படுத்தி வீட்டை விட்டு வெளியேற்றிய உள்ளார்.

கடைசி வரை ரதீஷை பார்க்க முடியாமலும் அவரை தொடர்பு கொள்ள முடியாமலும் தவித்த பவ சகிதா இது குறித்து கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையம், அஞ்சுகிராமம் காவல் நிலையம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் ஆகியவற்றில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை எஸ் கூறப்படுகிறது.

இதனிடையே தான் ஏமாற்றப்பட்டு இருப்பதாகவும் கூடுதல் வரதட்சனையுடன் ரதீஷிற்கு வேறு பெண் பார்த்து திருமணம் செய்து வைக்க ரதீஷின் குடும்பத்தினர் முயன்று வருவதாகவும் தெரிவித்த பவ சகிதா தனக்கு நீதி கிடைக்க வில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

மேலும் காவல் துறையும் அரசும் உடனடி நடவடிக்கை எடுத்து தனது கணவரை மீட்டு தரும்படி கோரிக்கை விடுத்தார்.

Updated On: 6 Jun 2021 3:15 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  2. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  3. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  4. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  5. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  6. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  7. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  8. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  9. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!
  10. தமிழ்நாடு
    நேரடி நியமனத்தால் வந்த புதுசிக்கல்!