/* */

கனமழை காரணமாக வரத்து குறைவு - 5 மடங்காக உயர்ந்த பூக்களின் விலை

கனமழை காரணமாக வரத்து குறைந்ததோடு தேவை அதிகரிப்பால், குமரியில் பூக்களின் விலை 5 மடங்காக உயர்ந்துள்ளது.

HIGHLIGHTS

கனமழை காரணமாக வரத்து குறைவு - 5 மடங்காக உயர்ந்த பூக்களின் விலை
X

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பகுதியில் அமைந்துள்ள புகழ் பெற்ற மலர் சந்தை

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பகுதியில் அமைந்துள்ள புகழ் பெற்ற மலர் சந்தையில் இருந்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் கேரள மாநிலத்திற்கு பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. கனமழை காரணமாகவும், பனிப்பொழிவு காரணமாகவும் பூக்களின் வரத்து, ஐந்தில் ஒரு பங்காக குறைந்துள்ள நிலையில் தற்போது கார்த்திகை மாதம் பிறந்ததால் கோவில்கள் மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்கு பூக்களின் தேவை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை ஐந்து மடங்காக உயர்ந்துள்ளது. கடந்த வாரம் வரை கிலோ 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த மல்லிகைப்பூ, தற்போது 1,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதே போன்று கிலோ 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த பிச்சிப்பூ, தற்போது 850 ரூபாய்க்கும், ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த தாமரை தற்போது 12 ரூபாய்க்கும், கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த அரளிப்பூ தற்போது 400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று ரோஜா செவ்வந்தி கிரேந்தி உள்ளிட்ட அனைத்து பூக்களின் விலையும் ஐந்து மடங்காக உயர்ந்துள்ளது.

Updated On: 17 Nov 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  3. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  4. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...
  5. லைஃப்ஸ்டைல்
    நேர்காணும் தெய்வம், அம்மா..!
  6. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  8. வீடியோ
    மிஷ்கின் படத்தில எல்லாமே violenceஅது societyக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  10. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்