/* */

காட்டாற்று வெள்ளத்தால் 250 ஏக்கர் விவசாயம் முற்றிலும் பாதிப்பு

குமரியில் காட்டாற்று வெள்ளத்தால் 250 ஏக்கர் நில பரப்பளவிலான விவசாயம் முற்றிலும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது.

HIGHLIGHTS

காட்டாற்று வெள்ளத்தால் 250 ஏக்கர்  விவசாயம் முற்றிலும் பாதிப்பு
X

குமரியில் தொடர் மழையால் ரப்பர் விவசாயம்  பாதிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்து, சுமார் 36 மணி நேரமாக தொடர்ந்து பெய்த கன மழையானது மலையோர பகுதிகளிலும் நீடித்ததால் மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தது.

அதன்படி அணைகளில் இருந்து 23 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டது, இதனால் விளை நிலன்களுக்குள் காற்றாற்று வெள்ளம் புகுந்தது.

தற்போது இரு அணைகளில் இருந்து 11 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் திற்பரப்பு அருவி, தாமிரபரணி ஆற்றில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

இதனால் குமரி மேற்கு மாவட்டத்தில் நடைபெறும் முக்கிய விவசாயமான ரப்பர் விவசாயம் முற்றிலும் பாதிப்பை சந்தித்து உள்ளது.

இதே போன்று தாமிரபரணி ஆற்றின் கரையோரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 250 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் செய்யப்பட்டு இருந்த வாழை, ரப்பர் தென்னை விவசாயம் முற்றிலும் பாதிப்பை சந்தித்துள்ளது.

மேலும் விவசாய நிலங்களுக்குள் காட்டாற்று வெள்ளம் புகுந்து உள்ளதால் விவசாயிகள் பெரும் பாதிப்பை சந்தித்து உள்ளனர்.

Updated On: 18 Oct 2021 3:06 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...