/* */

காஞ்சி: 13 வகையான மளிகைபொருள் தொகுப்புக்கான டோக்கன் விநியோகம் தீவிரம்!

கொரோனா நிவாரணமாக 13 வகையான மளிகை பொருட்களை பெருவதற்கான டோக்கன் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

HIGHLIGHTS

காஞ்சி: 13 வகையான மளிகைபொருள் தொகுப்புக்கான டோக்கன் விநியோகம் தீவிரம்!
X

13 வகையான மளிகை பொருட்களை பெற வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ள பெண் ஊழியர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து அன்றாட வாழ்க்கையை நகர்த்த பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர்.

இதனை கருத்தில் கொண்டு, தமிழக முதல்வர் கொரோனா சிறப்பு நிவாரண நிதியாக ரூ.4௦௦௦, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என அறிவித்தார். அதன்படி கடந்த வாரம் முதல் தவணையாக ரூ.2000 வழங்கப்பட்டது.

நோய்ப் பரவல் கட்டுப்படுத்த தளர்வுகள் அற்ற ஊரடங்கு தொடர்ச்சியாக அமுல்படுத்தப்பட்டு வருவதால் மளிகை பொருட்களை பெற பொதுமக்கள் திண்டாடும் நிலையில் அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் 13 வகையான மளிகைப் பொருட்கள் நாளை முதல் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

அதற்கான டோக்கன் விநியோகம் செய்யும் பணி காஞ்சிபுரம் மாவட்டத்தில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பல்வேறு பணிகள் இந்த பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தனிமனித இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் நாளொன்றுக்கு 200 பேருக்கு வழங்கும் நோக்கில் இதற்கான டோக்கன்களை‌ நியாய விலை கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று வழங்கி வருகின்றனர். நான்காம் தேதி வரை இப்பணிகள் நடைபெற்ற பின் பொருட்கள் குறிப்பிட்ட நாள் அன்று அவர்களுக்கு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 2 Jun 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்