/* */

உத்திரமேரூர் : குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறக்க கோரிக்கை

கிராமத்தில் கட்டப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு அளிக்க கிராம மக்கள் கோரிக்கை

HIGHLIGHTS

உத்திரமேரூர் :  குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறக்க கோரிக்கை
X

களக்காட்டூர் ஊராட்சியில் அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வராத குடிநீர் நிலையம்

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டது களக்காட்டூர் கிராமம். இங்கு இரண்டாயிரத்துக்கு மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பாலாற்று குடிநீர் திட்டத்தின் மூலம் வீடுகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் தூய்மையான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் நோக்கில் 2018-2019 மாநில நிதி குழு ஆணைய நிதியிலிருந்து ₹8.96 லட்ச மதிப்பிடில் காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை சார்பில் எதிர் சவ்வூடு பரவல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க திட்டமிட்டு பணிகள் இந்தாண்டு ஆரம்பத்தில் துவங்கி பணிகள் நிறைவுற்றது.

அருகிலிருந்த திருக்கோயிலிருந்து மின்சாரம் எடுத்து சோதனை ஓட்டம் நடைபெற்றது. அதன் பணிகள் கிடப்பில் போடப்பட்டது. மின் இணைப்பு கொடுக்கப்படமால் பூட்டியே பல மாதங்களாக கிடக்கிறது.

உள்ளாட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கிராம் மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 20 Aug 2021 6:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?