/* */

மோசமான முன்னேற்றம்: தற்போது பேருந்து ஊழியர்களை தாக்கிய மாணவர்கள்

படிக்கட்டில் பயணம் செய்யாதீர்கள் என கண்டித்த நடத்துநர் மற்றும் ஓட்டுநரை தாக்கிய பள்ளி மாணவர்கள் மீது ஸ்ரீபெரும்புதூர் காவல் துறையில் புகார்

HIGHLIGHTS

மோசமான முன்னேற்றம்: தற்போது பேருந்து ஊழியர்களை தாக்கிய மாணவர்கள்
X

பள்ளி மாணவர்களால் தாக்கப்பட்ட பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் இருந்து திருவள்ளூர் செல்லும் தடம் எண் 583A MTC பேருந்தில் ஸ்ரீபெரும்புதூரிலிருந்து பள்ளி மாணவர்கள் அருகிலுள்ள ஆயகொளத்தூர், தொடுகாடு, செங்காடு பகுதிகளுக்கு செல்வது வழக்கம்

இன்று அதேபோல் பேருந்தில் படியில் பயணம் செய்த மாணவர்களை ஓட்டுநர் மேலே ஏறுமாறு கண்டித்துள்ளனர். இதற்காக ஓட்டுநர் மற்றும் நடத்துநரை ஆயகொளத்தூர் கிராமத்தில் பேருந்து நின்றபோது பள்ளி மாணவர்கள் சரமாரியாக அடித்து விட்டனர்.

இதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டதில் அருகில் இருந்தவர்கள் மீட்டு இருவரையும் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதில் ஓட்டுநர் ஸ்ரீதர் என்பவர் மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடத்துநர் அமிர்தலிங்கம் புறநோயாளியாக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

பள்ளி மாணவர்கள் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரை தாக்கிய சம்பவம் பேருந்து நடத்துநர் மற்றும் ஓட்டுநர்களுக்கிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 28 April 2022 11:09 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...