/* */

கொரோனா பேரிடர் நிதி ரூ 15 ஆயிரம் வழங்கக் கோரி, படப்பை தூய்மை காவலர்கள் மனு

படப்பை ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை காவலர் 23 பேருக்கு, கொரோனா சிறப்பு ஊக்கத் தொகை ரூபாய் 15,000 வழங்கக் கோரி கலெக்டரிடம் மனு அளித்தனர்.

HIGHLIGHTS

கொரோனா பேரிடர் நிதி ரூ 15 ஆயிரம் வழங்கக் கோரி, படப்பை தூய்மை காவலர்கள் மனு
X

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த படப்பை ஊராட்சி தூய்மை காவலர்கள்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் போது சிறப்பாக பணியாற்றும் பணியாளர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் , படப்பை ஊராட்சியில் நீண்டகாலமாக பணியாற்றி வரும் 23 தூய்மை காவலர்களுக்கு தற்போதுதான் சம்பள உயர்வு ரூ3600 அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இரண்டாவது அலையின் போது தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது தூய்மை பணிகளை படப்பை முழுவதும் பணியாற்றிய தங்களுக்கு அரசு அறிவித்த சிறப்பு தொகையான ரூபாய் 15,000 அளிக்கப்படவில்லை என கூறி, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தியிடம் தூய்மை காவலர்கள் மனு அளித்தனர்.

இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

Updated On: 6 Sep 2021 10:00 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    12 டன் சின்ன வெங்காயத்தை கடத்திய லாரி டிரைவர் உள்ளிட்ட 2 பேர் கைது
  2. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
  3. காங்கேயம்
    இன்று முதல் போராட்டம்; வெள்ளகோவில் விவசாயிகள் முடிவு
  4. தமிழ்நாடு
    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை
  5. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால்...
  6. திருப்பூர்
    வெயில் நேரத்தில் வெளியே போகாதீங்க; திருப்பூர் கலெக்டர் அட்வைஸ்!
  7. கீழ்பெண்ணாத்தூர்‎
    தண்ணீர் பந்தலை திறந்து வைத்த துணை சபாநாயகர்
  8. ஈரோடு
    ஈரோடு அரசு அருங்காட்சியகத்தில் தஞ்சாவூர் ஓவியக் கண்காட்சி
  9. ஈரோடு
    ஈரோடு ஸ்ரீ சக்தி அபிராமி தியேட்டரில் கணபதி யாகம்
  10. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையில் இருந்து தண்ணீர் திறப்பு