/* */

இறந்துபோன தாய் உடலை பெற ஐந்து நாட்களாக போராடும் மகன்

காஞ்சிபுரம் அருகே விபத்தில் சிக்கி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த தாயின் உடலை பெற ஐந்து நாட்களாக ஒவ்வொரு துறையாக அலையும் அவலம்

HIGHLIGHTS

இறந்துபோன தாய் உடலை பெற  ஐந்து நாட்களாக போராடும் மகன்
X

காஞ்சிபுரம் அடுத்த விநாயகபுரம் பகுதியை சேர்ந்தவர் தாந்தோணி. ஆட்டோ ஓட்டுநனரான இவர் தனது தாயுடன் அதே பகுதியில் வசித்து வருகிறார்.

கடந்த மாதம் எட்டாம் தேதி அப்பகுதியில் சாலையை கடக்க முயன்ற போது, இவரது தாயார் வசந்தம்மாள் மீது அரசு பேருந்து மோதி அவசர ஊர்தி மூலம் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு மருத்துவமனை, அங்கிருந்து சென்னை ராஜீவ் காந்தி அரசு தலைமை மருத்துவமனைக்கு என மேல் சிகிச்சைக்காக மாற்றம் செய்யப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டதாலும் கொரோனா நோயாளிகளின் வருகை காரணமாகவும் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை எடுத்துக்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியதால் வசந்தம்மாள் மீண்டும் வீட்டிற்குள் வந்து உள்ளார்.

மீண்டும் சில நாட்களிலேயே உடல் நலம் குறைவு காரணமாக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து பரிசோதித்து கொண்டிருந்த போதே அவர் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் உயிரிழந்தார் . அதை தொடர்ந்து அவரது உடல் மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டது.

உடலை உடற்கூறு ஆய்வுக்காக காவல் நிலையத்திற்கு சென்று விபத்தில் சிக்கி உயிரிழந்து விட்டதாக கூறி அறிக்கை பெற்று வந்தால் உடற்கூறு பரிசோதனை செய்வதாக அரசு மருத்துவர்களும், மருத்துவ மனையில் சான்று பெற்று வந்தால் மட்டுமே உடற்கூறு ஆய்வுக்கான விண்ணப்பங்கள் தரப்படும் என கடந்த 4 நாட்களாகவே அவரது மகன் தாந்தோனியை அலை கழித்து வருகின்றனர்.

நாள்தோறும் 15 மணி நேரம் தனது தாயின் உடலை பெற இரு அலுவலகத்துக்கும் மாறி மாறி சென்று வந்த நிலையில் இன்று மதியம் ஒரு மணிவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

காவல்துறையினரோ அரசு மருத்துவமனையின் மருத்துவரை காலைபிடித்தாவது சான்றிதழ் வாங்கி வா என கேவலமாக பேசுவதாக மகன் கடும் குற்றச்சாட்டினார்.

Updated On: 5 May 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...