/* */

இராமாநுஜபுரம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் என்ன நடக்கிறது? மௌனம் காக்கும் நிர்வாகம்

ஸ்ரீபெரும்புதூர் வட்டம் ராமானுஜபுரத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மூட்டைக்கு பணம் கேட்பதாக புகார் எழுந்துள்ளது

HIGHLIGHTS

இராமாநுஜபுரம்  நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் என்ன நடக்கிறது? மௌனம் காக்கும் நிர்வாகம்
X

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ஆட்சி தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளிக்க வந்த பொதுமக்கள்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஐந்து ஒன்றியங்களில் 62,615 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த இரண்டு வருடங்களாக இயல்பான மழை அளவை காட்டிலும் கூடுதலாக நல்ல மழை பெய்துள்ளது. இதனால் மாவட்டத்தில் உள்ள ஏரிகள் மற்றும் குளங்கள் அனைத்தும் நீர் நிரம்பி நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் அதிகப்படியான பரப்புகளில் நெல் சாகுபடி செய்து வருகின்றனர். கே.எம்.எஸ் 2022 – 23 ஆம் ஆண்டு சொர்ணவாரி மற்றும் சம்பா பருவத்தில் 59,495 ஏக்கர் நெல் சாகுபடி செய்யப்பட்டு 01.09.2022 முதல் 29 இடங்களில் தற்காலிக அரசு நேரடி நெல் கொள் முதல் நிலையங்கள் திறந்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் நெல் கொள் முதல் பணிகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தற்போது நவரை பருவத்தில் 62,615 ஏக்கர் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அதன் அறுவடை காலம் மார்ச் 2023 மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்க உள்ள நிலையில் விவசாயிகளிடமிருந்து அறுவடை செய்யும் நெல்லினை முழுமையாக கொள் முதல் செய்யவேண்டும் என விவசாயிகள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்து ஆண்டைவிட கூடுதல் இடங்களில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் தற்காலிக அரசு நேரடி நெல் கொள் முதல் நிலையங்கள் திறந்து நெல் கொள் முதல் செய்ய உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 5 ஒன்றியங்களில் 123 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார். அவ்வகையில் ஸ்ரீபெரும்புதூர் வட்டத்திற்கு உட்பட்ட ராமானுஜபுரம் கிராமத்தில் கடந்த ஏழாம் தேதி முதல் துவங்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்பட்டது.

இந்நிலையில் அங்கு பணி புரியும் ஊழியர் தனது கட்டுப்பாட்டில் மற்றொரு நபரை வைத்துக்கொண்டு மூட்டை ஒன்றுக்கு 50 ரூபாய் முதல் எழுவது ரூபாய் வரை பெற்றுக் கொண்டு மட்டுமே விற்பனைக்கு அனுமதிக்கின்றனர் என குற்றச்சாட்டு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மாவட்ட ஆட்சியருக்கு புகாராக வந்தது. மேலும் இதுகுறித்து செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில் தற்போது அங்கு கொள்முதல் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற மாவட்ட ஆட்சியர் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இரு தரப்பு பிரிவினரும் மாறி மாறி குற்றம்சாட்டி கோரிக்கை மனு அளித்தனர்.

நிர்வாகம் முறையான விசாரணை மேற்கொண்டு விவசாயிகள் நெல்கள் தேக்கி வைக்கப்பட்டுள்ளதை உடனடியாக கொள்முதல் செய்து விவசாயிகள் இழப்பை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

ஏற்கனவே மாவட்ட ஆட்சியர் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பணம் வசூலித்தால் லஞ்ச ஒழிப்பு துறையினரால் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்த நிலையில் பல கொள்முதல் நிலையங்களில் கூடுதல் விலைகள் கொடுத்தால் மட்டுமே விவசாயிகள் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது என்பதை பல தரப்பினர் உண்மை எனக் கூறிவந்த நிலையிலும் மாவட்ட நிர்வாகம் ஒரு கொள்முதல் நிலையத்தில் கூட இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்பது ஏன் என்ற கேள்வி தற்போது விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.

Updated On: 18 April 2023 12:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’