/* */

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நல திட்ட உதவிகள்.

காஞ்சிபுரம் மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஆர்ப்பாக்கம் கிராமத்தில் உள்ள இருளர் பழங்குடியின மக்களுக்கு புடவை மற்றும் நல திட்ட உதவிகளை மாவட்ட தலைவர் தென்னரசு வழங்கினார்.

HIGHLIGHTS

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நல திட்ட உதவிகள்.
X

தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் ஆர்ப்பாக்கம் கிராமத்தில் மாவட்ட தலைவர் எஸ்.பி.கே.தென்னரசு தலைமையில் பொதுமக்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கிய போது. உடன் ஒன்றிய செயலாளர் மாகரல் வினோத்.

உத்திரமேரூர் அருகே தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் பழங்குடியின மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த ஆர்பாக்கம் கிராமத்தில் திரைப்பட நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் இருளர் மற்றும் பழங்குடியின மக்கள் 100 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி காஞ்சிபுரம் கிழக்கு ஒன்றிய தலைவர் மாகரல் ஏ.வி.எம்.வினோத் தலைமையில் நடைபெற்றது.

இதில், அந்தக் கட்சியின் காஞ்சி மாவட்ட நிர்வாகி எஸ்.பி.கே. தென்னரசு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அரிசி, வேட்டி,சேலை, காய்கறிகள் அடங்கிய தொகுப்பினை பழங்குடியின மற்றும் இருளர் மக்களுக்கு வழங்கினார். அதைத்தொடர்ந்து, அப்பகுதி மக்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

இது போன்று, தமிழக வெற்றி கழகத்தின் சார்பில், காஞ்சிபுரம் மாவட்ட சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு தொடர்ந்து அந்த கட்சியினர் நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியில், உத்திரமேரூர் கிழக்கு ஒன்றிய தலைவர் ரஞ்சித், காஞ்சிபுரம் கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள், சுகன், கே.சதீஷ், பி. வினோத், உதயன் மற்றும் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.

Updated On: 21 April 2024 3:15 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான போலி விளம்பரங்கள் குறித்து கலெக்டர்...
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  3. லைஃப்ஸ்டைல்
    ஸ்ரீ கிருஷ்ணரின் ஞான வார்த்தைகள் !
  4. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  6. வீடியோ
    🔥 Delhi-யில் அடித்த Annamalai அலை!😳 மிரண்டுபோன BJP தலைமை |...
  7. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    50 சிறந்த மகளிர் தின வாழ்த்துச் செய்திகள்!
  9. ஈரோடு
    அந்தியூர் பகுதியில் பரவலாக மழை: சேற்றில் சிக்கிய அரசு பேருந்து
  10. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை