/* */

வாந்தி-வயிற்றுப்போக்கு ஏற்பட்டு இளைஞர் மரணம்.. காஞ்சிபுரம் பகுதியில் குடிநீருடன் கழிவுநீர் கலந்ததா?

காஞ்சிபுரத்தில் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு இளைஞர் இறந்த நிலையில், கழிவுநீர் கலந்த குடிநீர் விநியோகம் செய்யப்பட்டதால் மரணம் நிகழ்ந்ததா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

HIGHLIGHTS

வாந்தி-வயிற்றுப்போக்கு ஏற்பட்டு இளைஞர் மரணம்.. காஞ்சிபுரம் பகுதியில் குடிநீருடன் கழிவுநீர் கலந்ததா?
X

உயிரிழந்த இளைஞர் சதீஷ்குமார்.

காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள 51 வார்டு பகுதிகளுக்கும் பாலாறு மற்றும் திருப்பாற்கடல் பகுதிகளில் இருந்து குடிநீர் பெறப்பட்டு நாள்தோறும் விநியோகபட்டு வருகிறது. குடிநீர் பிரச்சினை ஏற்படும் பகுதிகளில் தற்காலிகமாக குடிநீர் வழங்க 3 மாநகராட்சி குடிநீர் லாரிகள் பயன்பாட்டில் உள்ளது. பழுது நீக்கும் வரை இது போன்று குடிநீர் லாரிகள் மூலம் வழங்கப்பட்டு மக்கள் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது.

காஞ்சிபுரம் மாநகரில் சில பகுதிகளுக்கு ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிபாக்கத்தை அடுத்த திருப்பாற்கடல் பகுதியிலிருந்தும், குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், காஞ்சிபுரம் மாநகராட்சியின் 16 ஆவது வார்டு பகுதிக்கு உட்பட்ட ஓ.பி.பள்ளத்தெரு பகுதிக்கு திருப்பாற்கடல் பகுதியில் இருந்து வரும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. சுமார் ஒரு வார காலமாக குடிநீருடன் கழிவு நீரானது கலந்து வந்துள்ளதாக அந்தப் பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, ஓ.பி. பள்ளத்தெரு பகுதியை சார்ந்த புருஷோத்தம்மன்-லட்சுமி தம்பதியரின் மூன்றாவது மகன் சதீஷ்குமார் ( வயது21) நேற்று முன்தினம் இரவு உணவு உட்கொண்டுவிட்டு படுத்து உறங்கிய நிலையில் நேற்று அதிகாலை அவருக்கு வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி தொடர்ந்து ஏற்பட்டுள்ளது.

சற்று மனநலன் பாதிக்கப்பட்டவரான சதீஷ்குமாருக்கு தொடர்ந்து, வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கு இருந்ததால் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரை திடீரென மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல மருத்துவர்கள் பரிந்துரை செய்தனராம்.

இதற்கிடையே, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த சதிஷ்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதேபோல, வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்பட்ட 5 பேர் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மூவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினராம்.

10 மாதக் குழந்தை எமித்ரா மற்றும் 4 வயது சிறுவன் விஷ்ணுவரதன் என இரண்டு பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதொடர்பாக, காஞ்சிபுரம் மாவட்ட சுகாதார நலப் பணிகள் சார்பில், ஓ.பி. பள்ளத்தெரு பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்று உள்ளது.

இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட சுகாதார நல பணி துணை இயக்குநர் பிரியாராஜ் கூறுகையில், இளைஞர் இறப்புக்கு அவருடைய உடலில் தொற்று ஏற்பட்டுள்ளதே காரணம் எனவும் அது உணவு அல்லது குடிநீரால் ஏற்பட்டதா? என்பது ஆய்வக முடிவில் தான் தெரியும் என்றும் தெரிவித்தார்.

மேலும், ஓ.பி. பள்ளத்தெரு பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே மருத்துவ முகாம் நடைபெற்றதாக பிரியாராஜ் தெரிவித்தார். இருப்பினும், இளைஞர் மரணம் குறித்து மாநகராட்சி நிர்வாகம் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் முறையான ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களின் அச்சத்தை போக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

Updated On: 9 Nov 2022 1:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு