/* */

காஞ்சிபுரத்தில் வாசகர்களை இழந்து வரும் ஊர்ப்புற நூலகம்

தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் அமைந்துள்ள ஊர்புற நூலகம் மாடியில் அமைந்துள்ளதால் வாசகர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் வாசகர்களை இழந்து வரும் ஊர்ப்புற நூலகம்
X

அரசு மேல்நிலைப் பள்ளி எதிரே முதல் மாடியில் இயங்கி வரும் நூலகம்.

தற்போது இளைஞர்கள் மற்றும் மாணவர்களை புத்தகம் வாசிப்பதை ஊக்குவிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் மாவட்டம் தோறும் புத்தக திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. இந்தப் புத்தகத்தில் திருவிழாவில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பல்வேறு இடங்களில் புத்தக விற்பனைகள் நடைபெற்ற தற்போது சென்னையில் ஒய் எம் சி ஏ மைதானத்தில் சென்னை புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 11 நாட்கள் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் 126 அரங்குகளில் 50 ஆயிரம் மேற்பட்ட தலைப்புகளின் கீழ் பல லட்சம் புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டு அதில் 80 ஆயிரம் புத்தகங்கள் விற்பனையானதாக மாவட்ட நிர்வாகம் புத்தக பதிப்பாளர் சங்கங்களும் தெரிவித்தது.

இதன் மூலம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல ஆயிரம் புதிய புத்தக வாசிப்பாளர்களை பெற்றுள்ளது பெரும் மகிழ்ச்சி அடைத்துள்ள நிலையில், காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டத்தில் சுமார் நூற்றி ஐம்பதுக்கு மேற்பட்ட நூலகங்கள் செயல்பட்டு வருவதாகவும் இதில் பல லட்சங்கள் எண்ணிக்கையில் புத்தகங்கள் பொதுமக்களுக்கு வழங்கும் வாசிக்கவும் நூலகத்துறை செயல்பட்டு வருகிறது.

இந்த நூலகங்களில் உறுப்பினர்களாகி தங்களுக்கு தேவையான புத்தகங்களை குறிப்பிட்ட கால அவகாசத்தில் வாசித்து திருப்பித் தரும் வகையில் நூலகத்துறை நூலகர்களை நியமித்து அளித்து வருகிறது.

இது மட்டுமில்லாமல் நாள்தோறும் வரும் செய்தித்தாள்கள் வார பத்திரிக்கை மாத பத்திரிக்கை உள்ளிட்டுவைகளும் காலை 9 மணி முதல் 12 மணி வரையும் மாலை 3 மணி முதல் 6 மணி வரை பல்வேறு நூலகங்கள் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பகுதியில், அரசு மேல்நிலைப் பள்ளி எதிரே முதல் மாடியில் இயங்கி வருகிறது.

இந்த ஊர் புற நூலகத்தில் 2200 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ள நிலையில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் பல்வேறு தலைப்புகளிலும், சங்ககால இலக்கியங்கள் அறிவியல் அன்றாட நிகழ்வுகள், மருத்துவம் உள்ளிட்ட நூல்கள் அமைந்துள்ளது.

இந்நிலையில் இந்த நூலகம் தற்போது வாசகர்களை எழுந்து வருவது வருத்தம் அளிக்கிறது. மழைக்காலங்களில் அப்பகுதியில் நீர் தேங்குவதால் மூத்த குடிமக்கள் முதல் மாடி ஏறி நூல்கள் , அன்றாட செய்தித்தாள் நிகழ்வுகளை படிப்பதில் சற்று சிரமப்படுவதால் செல்வது அதிக அளவில் குறைந்துள்ளது.

மேலும் நூலக கட்டிடத்தில் இடவசதி இல்லாததால் நூல்களை மூட்டைகளிலும் சாதாரண நிலைகளையும் அடுக்கி வைக்கும் நிலை உருவாகியுள்ளது. மேல் கூரை பூச்சு விழுந்து ஆபத்தான நிலையிலேயே நூலகர் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

கடந்த காலம் செவிலிமேடு பேரூராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இந்த ஊர்புற நூலகம் செயல்படுவதால் இட மாற்றம் குறித்து கோரிக்கை வைத்த பொழுது, அதற்கான இடம் ஒதுக்கீடு செய்தும் நூலகத் துறைக்கு பத்திரப்பதிவு செய்ய தவறியதால் புதிய கட்டிடத்திற்கு ஒப்புதல் பெற நூலகத்துறை குழு சிரமம் ஏற்பட்டுள்ளது.

தற்போது மாநகராட்சியாக இப்பகுதி உருவாகி உள்ளதாலும் , பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு தற்போது செய்திகள் முடிந்து வருவதால் கீழ் தளத்தில் நல்ல கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்து மூத்த குடிமக்கள் உள்ளிட்ட அதிக அளவு வாசகர்களை ஈர்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

நூலகம் அருகே உள்ள பள்ளி மாணவிகளுக்கும் புத்தக வாசிப்பு அதிகரிக்கும் வகையில் இந்த முயற்சியை மேற்கொண்டால் ஒழுக்கமுள்ள மாணவர்கள் பலர் உருவாகுவார்கள் என்பதில் ஐயமில்லை.

Updated On: 9 Jan 2023 8:00 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  2. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  3. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  5. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  6. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  7. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  8. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  10. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு