/* */

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற கும்பாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு ஆன்மீக நிகழ்வுகள்

கச்சபேஸ்வரர் திருக்கோயில் மண்டை விளக்கு பூஜை, ஜம்பு மகரிஷி திருக்கோயில் கும்பாபிஷேகம், மதுரை ஆதீனம் கோயில்களின் சிறப்பு தரிசனம் என பல நிகழ்வுகள் நடைபெற்றது.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற  கும்பாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு ஆன்மீக நிகழ்வுகள்
X

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் திருக்கோயில் நடைபெற்ற கார்த்திகை மண்ட விளக்கு பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள்.

காஞ்சிபுரத்தில் உள்ள சுந்தராம்பிகை உடனுறை கச்சபேசுவரர் கோயிலில் பெண்கள் புது மண் சட்டியில் மாவிளக்கு ஏற்றி தலையில் சுமந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தும் கடை ஞாயிறு திருவிழா நடைபெற்றது.

விஷ்ணு பகவான் ஆமை வடிவில் சிவபெருமானை வணங்கிய பெருமைக்குரிய கோயில் காஞ்சிபுரத்தில் உள்ள கச்சபேசுவரர் திருக்கோயில்.இக்கோயிலில் ஆண்டு தோறும் கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைக்களில் மட்டும் பெண்கள் புதுமண் சட்டியில் மாவிளக்கு ஏற்றி வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவது காலம் காலமாக வழக்கமாக இருந்து வருகிறது.இதனை கடைஞாயிறு திருவிழா என்றும் சிலர் மண்டை விளக்கு என்றும் சொல்வார்கள்.

கார்த்திகை மாத முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி ஏராளமான பெண்கள் ஆலய வளாகத்தில் புது மண் சட்டியில் பச்சரிசி மாவு, வெல்லம் சேர்த்து அந்த மாவின் நடுவில் அகல் விளக்கில் நெய் தீபம் ஏற்றி அதனை தலையில் சுமந்து வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.பின்னர் கோயில் மூலவர் கச்சபேஸ்வரரையும் வழிபட்டனர்.



இதேபோல், காஞ்சிபுரம் வேலாத்தம்மன் கோயில் தெருவில் ஜம்பு மகரிஷிக்கென தனி சந்நிதியாக புதியதாக திருக்கோயில் கட்டப்பட்டிருந்தது. இக்கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி சனிக்கிழமை மாலையில் திருவிளக்கு வழிபாடு நடைபெற்றது.

யாகசாலை பூஜைகள் சனிக்கிழமை வேலூர் சைவ சித்தாந்த பேரவை அன்பர்களால் தொடங்கப்பட்டன. 2வது நாளாக ஞாயிற்றுக்கிழமை பூரணாகுதி தீபாராதனைகள் முடிந்து கோயில் ராஜகோபுரத்துக்கு புனித நீர்க்குடங்கள் எடுத்து செல்லப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் துணைத் தலைவர் கோ.ப.செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது.

கும்பாபிஷேகத்திற்குப் பின்னர் கோயில் மூலவரான ஜம்பு மகரிஷிக்கு சிறப்பு அபிஷேகமும்,அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன.

காஞ்சிபுரம் கோயில்களில் மதுரை ஆதீனம் தரிசனம்


காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை மதுரை ஆதீனம் ஸ்ரீஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் சுவாமி தரிசனம் செய்தார்.

மதுரை ஆதீனம்233 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீஞான சம்பந்த தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரநாத சுவாமி திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.ஆதீனத்தை அறங்காவலர் குழு உறுப்பினர் வ.ஜெகன்னாதன் வரவேற்று ஆலயத்துக்குள் அழைத்து சென்றார்.

பின்னர் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்,காமாட்சி அம்மன் திருக்கோயில் ஆகியனவற்றில் சுவாமி தரிசனம் செய்தார்.அந்தந்த கோயில் நிர்வாகங்களின் சார்பில் ஆதீனத்துக்கு மரியாதையும்,கோயில் பிரசாதமும் வழங்கப்பட்டது.மாலையில் ஓரிக்கை நவதுர்க்கை அம்மன் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள ஐயப்ப சுவாமிக்கு நடைபெற்ற பஜனையிலும்,ஜோதி வழிபாட்டிலும் கலந்து கொண்டார்.

பின்னர் பக்தர்களுக்கு ஆசியும் வழங்கினார்.சனிக்கிழமை பிள்ளையார்பாளையம் முருகன் கோயிலில் நடைபெற்ற கந்தசஷ்டி திருவிழா தொடர்பாக நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,மாணவியர்க்கு பரிசுகளையும்,ஆசிகளையும் மதுரை ஆதீனம் வழங்கினார்.

Updated On: 19 Nov 2023 3:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மரணம், இயற்கையின் நீள்துயில்..!
  2. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை எனும் கவசம் அணியுங்கள்..! வாழ்க்கை வெற்றியாக அமையும்..!
  3. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை மட்டும் மன்னித்துவிடாதீர்கள்..!
  4. வீடியோ
    🔴LIVE : #vijay -ன் அரசியல் பிரவேசம் ! பகிர் கிளப்பிய #raghavalawrence...
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம், சுய கௌரவத்தின் அடையாளம்..!
  6. ஆன்மீகம்
    துறவறம் பூண்டதும் தூய வெள்ளாடை அணிந்த வள்ளலார்..!
  7. மதுரை மாநகர்
    ப்ளஸ் 2 தேர்வு: மதுரை மத்திய சிறையில் அதிக மதிப்பெண் ஒருவர் சாதனை
  8. வீடியோ
    சிறைக்குள் சென்ற அடுத்த பத்தாவது நிமிடமே Savukku Shankar-ன் எலும்பை...
  9. வீடியோ
    🔴LIVE :எல்லாமே சரியா இருக்கு! எதுக்கு சார் FINE மூச்சமூட்ட போராடிய...
  10. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்