/* */

வரதராஜப் பெருமாள் ஆனி மாத கருடசேவை: ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோயில் ஆண்டுக்கு வைகாசி பிரம்மோற்சவம் , ஆனி , ஆடி ஆகிய மூன்று மாதங்களிலும் கருட சேவை நிகழ்வு நடைபெறும்

HIGHLIGHTS

வரதராஜப் பெருமாள் ஆனி மாத கருடசேவை: ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
X

வரதராஜ பெருமாள் திருக்கோயில் ஆனி கருட சேவை நிகழ்வின் போது ஸ்ரீ தேவராஜ சுவாமி குடை சூழ பக்தர்கள் புடைசூழ மாடவீதி உலா வந்த போது.

கோயில் நகரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் பல்வேறு திவ்ய தேசங்கள் அமைந்துள்ளது அதில் ஒன்றான அத்திவரதர் புகழுக்குரிய காஞ்சிபுரம் தேவராஜசுவாமி கோயிலில் ஆனி மாத ஏகாதசியையொட்டி இன்று மாலை உற்சவர் தேவராஜ சுவாமி கருட வாகனத்தில் அலங்காரமாகி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பழமையும்,வரலாற்றுச் சிறப்பும் உடைய காஞ்சிபுரத்தில் உள்ள பெருந்தேவி தாயார் சமேத தேவராஜ சுவாமி திருக்கோயிலில் ஆண்டு தோறும் ஆனி மாத ஏகாதசி தினத்தன்று உற்சவர் தேவராஜ சுவாமி கருட வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பது வழக்கமாக இருந்து வருகிறது.

ஆண்டுக்கு மூன்று முறை திருக்கோயில் கருட சேவை நிகழ்வு நடைபெறும். வைகாசி மாத பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாள் கருட சேவை நிகழ்வு அதனை தொடர்ந்து ஆணி மற்றும் ஆடி மாதங்களில் இருமுறையும் என மூன்று முறை பக்தர்கள் கருட சேவை வாகனத்தில் எம்பெருமான் எழுந்தருளி அருள் பாதிப்பார்

சிறப்பு மலர் அலங்காரத்தில் கருட வாகனத்தில் காட்சியளிக்கும் ஸ்ரீ தேவராஜ சுவாமி

அவ்வகையில், இந்த ஆண்டு ஆனி மாதத்தினையொட்டி உற்சவர் தேவராஜ சுவாமி ஆலயத்திலிருந்து முத்துக்கொண்டை அலங்காரத்தில் கருட வாகனத்தில் பல வண்ண மாலைகள் கொண்டு அலங்காரமாகி திருக்கோயில் வளாகத்தில் ஆழ்வார் சுற்றுப்பிரகாரத்திற்குள் வலம் வந்தார்.

பின்னர் திருக்கோயில் மாட வீதிகளில் வலம் வந்தும் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.பெருமாள் ஆலயம் வந்து சேர்ந்ததும் பெரியாழ்வார் சாற்றுமுறை உற்சவமும் நடைபெற்றது.

விடுமுறை நாளாகவும் இருந்ததால் திரளான வெளியூர் மற்றும் வெளிமாநில பக்தர்களும் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.

குலுக்கலில் பக்தர்கள் மீது 3 முறை விழுந்த குடை

பெருமாள் கருட வாகனத்தில் அலங்காரமாகி புறப்பாடு காணும் போது அவரை சுமந்து செல்லும் பாதாந்தாங்கிகள் சாமியை குலுக்கி பக்தர்களுக்கு ஆனந்த சேவை காண்பிப்பர். அவ்வகையில் ஆலயத்திலிருந்து வெளியில் வந்து ஆழ்வார் சுற்றுப் பிரகாரத்தில் வலம் வந்த போது இரு முறை குடையை முறையாக குலுக்காததால் திடீரென குடை அருகில் வந்து கொண்டிருந்த பக்தர்கள் மீது சாய்ந்தது.

பின்னர் ஆலயத்துக்கு வெளியில் வந்து 16 கால் மண்டபத்தில் நின்று கொண்டிருந்த போதும் குடை அருகில் இருந்த பக்தர்கள் மீது விழுந்தது. 3 முறை குடை சாய்ந்ததைத் தொடர்ந்து குடையை வாகனத்தின் பின்புறத்தில் கயிற்றால் கட்டி பட்டாச்சாரியார்கள் பிடித்து வந்தனர்.

Updated On: 29 Jun 2023 2:00 PM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  3. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  4. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  5. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  6. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  7. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  8. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  9. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!