/* */

பிரமோற்சவ விழாவினையொட்டி தேரில் எழுந்தருளிய வைகுண்ட பெருமாள்

ஸ்ரீதேவி பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் பிரம்மோற்சவ ஏழாம் நாள் விழாவில் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

HIGHLIGHTS

பிரமோற்சவ விழாவினையொட்டி தேரில் எழுந்தருளிய வைகுண்ட பெருமாள்
X

பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாள் விழாவில் ஸ்ரீ வைகுண்டநாதர் ஸ்ரீதேவி பூதேவியுடன் எழுந்தருளிய போது

கோவில் நகரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் பல்வேறு சைவ வைணவ மற்றும் சமண என பல்வேறு ஆலயங்கள் புகழ் பெற்று விளங்கி வருகிறது.

அவ்வகையில் பூலோகவின் நகரம் என அழைக்கப்படும் ஸ்ரீ வைகுந்தவல்லி சமேத ஶ்ரீ வைகுண்ட பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவ விழா கடந்த செவ்வாய்க்கிழமை அன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கி நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் காலை மாலை வேலைகளில் காஞ்சிபுரத்தின் ராஜ வீதியில் பலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

அவ்வகையில் கடந்த வியாழக்கிழமை அதிகாலை கருட சேவை வாகனத்தில் மஞ்சள் பட்டு உடுத்தி கோபுர வாசலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் அதனை தொடர்ந்து பல்வேறு வாகனங்களில் பல்வேறு மலர் அலங்காரங்களில் எழுந்தருளி வருகிறார்.


பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாளான இன்று திருத்தேர் உற்சவம் நடைபெறுகிறது. ஸ்ரீ வைகுண்டநாதர் மல்லி மனோரஞ்சிதம் உள்ளிட்ட பல்வேறு வண்ண மலர்கள் மற்றும் அலங்கார நகைகள் மற்றும் ஸ்ரீதேவி பூதேவியுடன் கோயில் அலங்காரம் மண்டபத்தில் எழுந்தருளி சிறப்பு பூஜைகளுக்கு பின் திருத்தேரில் எழுந்தருளினார்.

அப்போது பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்ற முழக்கங்கள் எழுப்ப அவருக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்கள் வடம் பிடிக்க ராஜ வீதியில் ஸ்ரீ வைகுண்டநாதர் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.


திருத்தேர் விழாவினை ஒட்டி வலம்வரும் எம்பெருமானை பக்தர்கள், பஜனை குழுவினர் மற்றும் கோஷ்டினர் வேத பாராயணங்கள் பாடி அழைத்துச் செல்ல வலம் வரும் எம்பெருமான் ஆங்காங்கே பக்தர்கள் அளிக்கும் சிறப்பு வரவேற்புகளை ஏற்று அவர்களுக்கு அருள் பாலித்தார்.

விழாவினை ஒட்டி பக்தர்களுக்கு ஓர் அன்னதானம் உள்ளிட்ட பொருட்கள் விழா குழுவினர்களால் அளிக்கப்பட்டு வருகிறது.

Updated On: 22 May 2023 5:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு