/* */

உத்திரமேரூர்:சிறுமியின் கோரிக்கை மனு; அதிகாரிகளை அனுப்பிய முதலமைச்சர்!

உத்திரமேரூர் வாடாதவூர் சிறுமியின் கோரிக்கை மனுவை நிறைவேற்ற அதிகாரிகளை அனுப்பி அசத்தியுள்ளார் தமிழக முதலமைச்சர்.

HIGHLIGHTS

உத்திரமேரூர்:சிறுமியின் கோரிக்கை மனு; அதிகாரிகளை அனுப்பிய முதலமைச்சர்!
X

வாடாதவூரில் சிறுமி கீர்த்திகாவை சந்தித்து கோரிக்கை மனுக்கள் தொடர்பாக வாக்குறுதி அளித்த உத்தரமேரூர் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் சுற்றுப்பயணத்தின் போது பொதுமக்களிடம் பெறப்படும் கோரிக்கை மனுக்களுக்கு திமுக ஆட்சி அமைந்ததும் 100 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார்.

இதன்படி திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் உங்கள் தொகுதியில் முதல்வர் என்ற திட்டத்தை உருவாக்கி அதற்கென ஒரு ஐ.ஏ.எஸ்.அதிகாரியையும் நியமித்தார். இத்திட்டத்தின் மூலம் பெறப்படும் மனுக்கள் உடனுக்குடன் தீர்வு காணப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூரை அடுத்த வாடாதவூரில் 8 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி கீர்த்திகா(15) என்பவர் வாடாதவூர் காலனிக்கு தெருவிளக்குகள் இல்லை என்றும், புதிய சாலை வசதி அமைத்துத் தர வேண்டும் எனவும் கேட்டு கோரிக்கை மனு அண்மையில் அனுப்பியிருந்தார்.

இம்மனுவின் அடிப்படையில் சிறுமி கீர்த்திகாவை உத்தரமேரூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துக்குமரன்,வேல்முருகன் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சந்தித்தனர். தெருவிளக்கு தொடர்பாக மின்வாரியத்துக்கு பரிந்துரைக் கடிதம் அனுப்பி விரைவில் அக்கோரிக்கை நிறைவேற்றப்படும்.

பொதுமுடக்க காலம் முடிந்த பிறகு புதிய சாலை வசதி தேசிய ஊரக வளர்ச்சித்திட்டம் மூலம் செய்து கொடுக்கப்படும் எனவும் வாக்குறுதிகள் அளித்தனர். சிறுமி கீர்த்திகாவும் , பொதுமக்களும் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தார்.

Updated On: 29 May 2021 12:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...