/* */

கனமழை காரணமாக குடியிருப்பு பகுதியில் சூழ்ந்த நீரை துரிதமாக வெளியேற்றிய பேரூராட்சி

உத்திரமேரூர் நகரில் பெய்த கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்த மழைநீரை பேரூராட்சி பணியாளர்கள் ஜேசிபி உதவியுடன் வெளியேற்றினர்

HIGHLIGHTS

கனமழை காரணமாக குடியிருப்பு பகுதியில் சூழ்ந்த நீரை துரிதமாக வெளியேற்றிய பேரூராட்சி
X

உத்திரமேரூர் பேரூராட்சி பகுதியில் சூழ்ந்த மழை நீரை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்ட பேரூராட்சி ஊழியர்கள்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வானிலை மாற்றம் காரணமாக கடந்த இரு தினங்களுக்கு முன்பு உத்திரமேரூர் பகுதியில் கனமழை பெய்தது.

இதன் காரணமாக உத்தரமேரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பல தாழ்வான பகுதியில் மற்றும் வடிகால் வசதி இல்லாத கக்காநல்லூர் இருளர் காலனி, அண்ணா நகர் உள்ளிட்ட பல குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் குடியிருப்புப் பகுதிகளை சூழ்ந்தது.

இதுகுறித்து அப்பகுதி குடியிருப்புவாசிகள் உத்தரமேரூர் பேரூராட்சிக்கு புகார் தெரிவித்தும் பேரில் பேரூராட்சி நிர்வாக தூய்மைப் பணியாளர்கள் ஜேசிபி எந்திரம் மூலம் கால்வாயை தூர்வாரி மழை நீர் முழுவதையும் துரிதமாக அகற்றினர்.

மேலும் அப்பகுதி முழுவதும் உள்ள கால்வாயில் தூர்வாரி மீண்டும் அப்பகுதியை புனரமைப்பு செய்தனர்.

Updated On: 19 July 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கடக ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. லைஃப்ஸ்டைல்
    இணைந்தே வாழும் அன்றில் பறவையாய் வாழ்வோம் வாடா..!
  3. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மிதுன ராசிக்கு எப்படி இருக்கும்?
  4. லைஃப்ஸ்டைல்
    சிவபெருமான் பற்றிய மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைப்பழ தோலில் இவ்ளோ நன்மைகளா..? தோலை இனிமே வீசமாட்டோம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    ஒன்றாக இருப்பதன் சக்தி: திருமணம் பற்றிய மேற்கோள்கள்
  7. தொழில்நுட்பம்
    அமேசானின் கோடை விருந்து: மே 2ல் மாபெரும் சலுகை!
  8. வீடியோ
    குஜராத்தில் பிடிபட்ட போதை பொருள் | H Raja பரப்பரப்பு பேட்டி |#hraja...
  9. ஈரோடு
    அந்தியூரில் நீர்மோர் பந்தலை திறந்து வைத்த எம்.எல்.ஏ. வெங்கடாஜலம்
  10. லைஃப்ஸ்டைல்
    மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து உண்பதின் அவசியம் என்ன..?...