/* */

வாகனம் உருவாக்கிய பக்தருக்கு தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளிய எம்பெருமான்.

திருப்புட்குழி ஸ்ரீ விஜயராகப் பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவ விழாவில் எட்டாம் நாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளினார் விஜயராக பெருமாள்.

HIGHLIGHTS

வாகனம் உருவாக்கிய பக்தருக்கு தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளிய எம்பெருமான்.
X

பிரம்மோற்சவ விழாவில் எட்டாம் நாளில் தங்க குதிரை வாகனத்தில் வாயில் புல்லினை ருசித்தபடி காட்சியளித்த விஜயராகவபெருமாள்

திருப்புட்குழி ஸ்ரீ விஜயராகப் பெருமாள் குதிரை வாகனத்தினை தனக்காக அசையும் வகையில் உருவாக்கிய விஸ்வகர்மா வசித்த பகுதிக்கு சென்று காட்சியளிக்கும் நிகழ்வு காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது.

கோயில் நகரம் காஞ்சிபுரத்தில் பல்வேறு திவ்ய தரிசனங்களும், பரிகார தளங்களும் அமைந்துள்ளது. இது மட்டும் இல்லாமல் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள திருக்கோயில்களும் பல பிரசித்தி பெற்றவை அவைகளில் ஒன்று திருப்புட்குழி மரகதவல்லி சமேத ஸ்ரீ விஜயராகப் பெருமாள். 108 பெருமாள் திவ்ய தேசங்களில் இத்திருத்தலமும் ஒன்றாக விளங்கி வருகிறது.

இத்திருத்தலத்தில் கடந்த எட்டு தினங்களுக்கு முன்பு பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கி , நாள்தோறும் காலை மற்றும் மாலை வேலைகளில் பல்வேறு வாகனங்களில் ஸ்ரீ விஜயராகப்பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்தார்.

பிரம்மோற்சவ விழாவில் முக்கிய நிகழ்வான கருட சேவை, திருத்தேர் விழாக்கள் நிறைவு பெற்ற நிலையில், நேற்று எட்டாம் நாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.


கடந்த ஐந்து தலைமுறைக்கு முன்பு விஜயராகப் பெருமாளின் மீது அதிபக்தி கொண்ட விஸ்வகர்மா அருளப்பா ஆச்சாரி எம்பெருமானுக்கு அழகிய குதிரை சிலையை உடல், வயிறு மற்றும் பின்பகுதி என மூன்று பாகங்களாக தத்ரூபமாக வடிவமைத்து அதில் எழுந்தருளி வீதி உலா வரும் நிலையில் நிஜ குதிரையில் எம்பெருமான் வலம் வருவது போல் தலை மற்றும் பின்பகுதி அசையும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதைக் கண்ட மற்ற திருத்தலங்களிலும் இதே போன்று குதிரை வாகனம் செய்ய கூறிய போது, அதனை தவிர்த்து விஜயராகவ பெருமானுக்கு மட்டுமே செய்வேன் என்று தனது உளியால் தன்னை மாய்த்துக் கொண்டதாக வரலாறு கூறுகிறது.

இந்த குதிரை திருக்கோயில் வளாகத்தில் இருக்கும் நிலையில் இரவு நேரங்களில் அருகில் உள்ள விளைநிலங்களில் மேய்ந்து வந்ததாகவும், அதனால் அப்பகுதி மக்கள் குதிரைக்கு புல் கட்டை தந்த பின் அதை ருசித்த பின் தான் வீதி உலா வருவதும் வழக்கம் என உள்ளது.

விஸ்வகர்மாவின் பக்தியை கண்ட எம்பெருமான் வருடம் தோறும் குதிரை வாகன தினத்தன்று விஸ்வகர்மா வசித்த பகுதிக்கு நேராக சென்று அவருக்கு காட்சியளித்த பின், புல்கட்டை ருசித்து அவர்கள் அளிக்கும் மாலையை மரியாதையை ஏற்று சூடி கொண்டு அதன்பின் அப்பகுதியில் வலது மற்றும் இடது புறமாக மூன்று முறை சுற்றி அங்கிருந்து புறப்பட்டு கிராம வீதிகளில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சி இன்று தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி கோலாகலமாக நடைபெற்றது.

இதனைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து கூடி எம்பெருமானை பக்தியுடன் வழிபட்டு சென்றனர்.

Updated On: 23 Feb 2023 12:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?