கிராமப்புற சேவைக்காக காஞ்சிபுரம் மருத்துவருக்கு மத்திய அமைச்சர் நாளை தங்கப்பதக்கம் வழங்குகிறார்..!

டெல்லி தேசிய மருத்துவக்கல்வி மையத்தில் நடைபெறும் விழாவில் நாளை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர், காஞ்சிபுரம் மருத்துவருக்கு தங்கப்பதக்கம் வழங்கி கவுரவிக்கிறார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
கிராமப்புற சேவைக்காக காஞ்சிபுரம் மருத்துவருக்கு மத்திய அமைச்சர் நாளை தங்கப்பதக்கம் வழங்குகிறார்..!
X

மருத்துவ சேவைக்காக மத்திய அமைச்சரிடம் தங்கப்பதக்கம் பெறும் காஞ்சிபுரம் டாக்டர் பாலமுருகன்.

காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருபவர் த.தே.பாலமுருகன் (வயது 37). இவருக்கு கிராமப்புற மக்களுக்கு சிறப்பாக சேவை செய்ததற்காக தேசிய மருத்துவக் கல்வி தேர்வு வாரியம் மத்திய அரசின் உயரிய விருதை புது டெல்லியில் நாளை வழங்குகிறது.

காஞ்சிபுரம் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் உதவிப் பேராசிரியராகவும், புற்றுநோய் பிரிவில் உயர் அறுவை சிகிச்சை நிபுணராகவும் பணியாற்றி வருபவர் டாக்டர் பாலமுருகன்.

இவர் புற்றுநோயியல் துறையில் கிராமப்புற மக்களுக்கு சிறப்பான சேவை மற்றும் விழிப்புணர்வு செய்தமைக்காக மத்திய அரசின் உயரிய விருதுக்கு தேர்வாகியுள்ளார். இவருக்கு புது டெல்லியில் அம்பேத்கர் தேசியக் கல்வி மையத்தில் நடைபெறும் 21வது பட்டமளிப்பு விழாவில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நாளை (திங்கள்கிழமை) விருதை வழங்கி கௌரவிக்கவுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த மருத்துவர் பாலமுருகன், சென்னை அரசு மருத்துவக்கல்லூரியில் மருத்துவப் படிப்பை முடித்தவர். காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகில் கங்கா புற்றுநோய் ஆலோசனை மையம் ஒன்றையும் அமைத்து, பொதுமக்களுக்கு புற்றுநோய் குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறார்.

தமிழகத்திலேயே, முதல்முறையாக அரசு மருத்துவக்கல்லூரியில் உயர் மருத்துவக்கல்வி படித்து அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் ஒருவருக்கு மத்தியஅரசு விருது அறிவித்து இருப்பது, குறிப்பிடத்தக்கது. இது தமிழகத்துக்கும், காஞ்சிபுரத்துக்கும் கிடைத்த பெருமை என அரசு புற்றுநோய் மருத்துவமனை மருத்துவர்கள், பணியாளர்கள் பலரும் மருத்துவர் பாலமுருகனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.


Updated On: 19 Jun 2022 1:00 PM GMT

Related News

Latest News

 1. இந்தியா
  நாடு முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை வருது..!
 2. காஞ்சிபுரம்
  விவசாயிகள் வீண் செலவை குறைக்கும் நானோ யூரியா: காஞ்சிபுரம் ஆட்சியர்...
 3. குமாரபாளையம்
  குமாரபாளையம் லட்சுமி நாராயண சுவாமி கோவில் உண்டியல் திறப்பு
 4. காஞ்சிபுரம்
  முதல்வர் நிகழ்வில் முகக்கவசம் அணியாமல் உடன்பிறப்புகள் அலட்சியம்..!...
 5. லைஃப்ஸ்டைல்
  Thiripala Suranam benefits in Tamil திரிபலா சூரணம் பயன்கள் தமிழில்
 6. புதுக்கோட்டை
  தேசிய வருவாய்வழி திறனறித்தேர்வு: மேலப்பட்டி மாணவர்களுக்கு வாசகர்...
 7. இந்தியா
  நுபுர்சர்மா கருத்து விவகாரம்: ராஜஸ்தானில் வன்முறை வெடித்தது
 8. திருநெல்வேலி
  மக்கள் குறைதீர்க்கும் நாள்: பொது மக்களிடம் மனுக்களை பெற்ற மேயர்
 9. புதுக்கோட்டை
  புதுக்கோட்டை புத்தகத் திருவிழா: சிறந்த நூல்களுக்கான விருதுகள்...
 10. விளையாட்டு
  ரசிகர்களுடன் செல்பி எடுக்க இந்திய வீரர்களுக்கு பி.சி.சி.ஐ தடை