/* */

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 200 கன அடி உபரி நீர் திறப்பு.

அடையாறு ஆற்றின் கரையோரம் உள்ள தாழ்வான பகுதிகள் மற்றும் 6 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 200 கன அடி உபரி நீர் திறப்பு.
X

தொடர் மழை , நீர் வரத்து காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 200 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது

சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்வரத்து மற்றும் மழை காரணமாக காலை 10 மணிக்கு 200 கன அடி நீர் திறக்கப்பட்டது..

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வானிலை மாற்றம், குறைந்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த 10 தினங்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது.

சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரி காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் பகுதியில் அமைந்துள்ளது. இந்த பகுதிகளில் கடந்த ஒரு வார காலத்தில் குன்றத்தூரில் 91.6 மில்லி மீட்டர் செம்பரம்பாக்கம் பகுதியில் 70 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவான 24 அடியில் தற்போது 22.29 அடி நீர் உள்ளது. 3.645 டிஎம்சி தண்ணீர் கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில் தற்போது 3.195 டிஎம்சி தண்ணீர் இருப்பு உள்ளது.

மேலும் நீர்வரத்து 452 கன அடி நீர் உள்ள நிலையில் தற்போது 163 கன அடி நீர் வெளியேறி வருகிறது. தொடர் மழை மற்றும் நீர் வரத்து காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியின் பாதுகாப்புக் கருதி இன்று காலை 10 மணிக்கு 200 கன அடி நீர் வெளியேற்றப்பட உள்ளது.

மேலும் நீர் வெளியேறும் நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியை ஒட்டி உள்ள சிறுகளத்தூர் காவனூர் குன்றத்தூர் வழியம்பேடு திருநீர்மலை மற்றும் அடையார் ஆற்றின் கரையோரம் உள்ள தாழ்வான பகுதியில் உள்ள பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கையாக வெளியிட்டுள்ளது.

இதேபோல் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 381 ஏரிகளில் 45 ஏரிகள் முழு கொள்ளளவையும் 35 ஏரிகள் 75 சதவீதத்தையும் நீர் இருப்பை பெற்றுள்ளது.

சென்னை திருவள்ளூர் செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்கள் அடங்கிய பாலாறு உப வடி நிலகோட்ட கட்டுப்பாட்டில் உள்ள 102 ஏரிகளில் 173 ஏரிகள் முழு கொள்ளளவையும் 220 ஏரிகள் 75% நீர் இருப்பை பெற்றுள்ளதாக பொதுப்பணித்துறை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

காலை முதலே காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழைப்பொழிவு நின்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 28 Nov 2023 4:45 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...