/* */

காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் முன்பு முதியவர் தீக்குளிக்க முயற்சி

சூனாம்பேடு பகுதியில் வசிக்கும் முதியவர் தனது நிலத்தை அளவீடு செய்ய விடாமல் மற்றொருவர் தடுத்து வருவதாகக்கூறி, தீக்குளிக்க முயன்றார்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் முன்பு முதியவர் தீக்குளிக்க முயற்சி
X

தீக்குளிக்க முயன்ற முதியவர் இடம் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர்.

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் தாலுகா அரசூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி, வயது 55. இவருக்கு சொந்தமாக ஒரு ஏக்கர் 20 சென்ட் நிலம் உள்ளது. இதன் அருகில் ஆசிரியர் ஏழுமலை என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ள நிலையில் சுப்பிரமணி தனது நிலத்தை அளவீடு செய்து, தனது சகோதர சகோதரிகளுக்கு அளிக்கத் திட்டமிட்டு மனு செய்த நிலையில் அளவீடு செய்யாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர்.

மேலும் இவருக்கு அடிக்கடி தொல்லை கொடுப்பதாக சூனாம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தும் காவல்துறை எந்தவித நடவடிக்கையும் ஆசிரியர் மேல் எடுக்காததால், மன உளைச்சலுக்கு ஆளானார். இவருடைய ஆவணங்கள் ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டம் ஆக இருந்தபோது மனு அளித்த குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து புகார் அளிக்க நின்று கொண்டிருந்தபோது திடீரென தனது கையில் கொண்டு வந்த மண்ணெண்ணையை ஊற்றி, தற்கொலைக்கு முயன்றார். அப்போது அருகில் இருந்தவர்கள் சுதாரித்து கொண்டு, அவரை காப்பாற்றி காவல்துறையிடம் ஒப்படைத்தனர். அவரை அழைத்துக்கொண்டு குளியலறை சென்று உடல் முழுதும் நீர் ஊற்றி அணைத்தனர். அவரிடம் விசாரணை நடத்தி, பின்னர் பத்திரமாக வீட்டிற்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

Updated On: 28 Feb 2022 6:45 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...