/* */

தலைமை ஆசிரியர் இடமாற்றத்தை ரத்து செய்யக்கோரி மாணவர்கள் போராட்டம்

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த இடையார்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் ஜெயந்தி இடமாற்றம் செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

தலைமை ஆசிரியர் இடமாற்றத்தை  ரத்து செய்யக்கோரி மாணவர்கள் போராட்டம்
X

எடையார்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியரை இடமாற்றத்தை ரத்து செய்யக்கோரி மாணவர்கள் பெற்றோர்களுடன் பள்ளி முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட போது 

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டம் இடையார்பாக்கம் கிராமத்தில் இயங்கி வருகிறது ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி. இங்கு ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரை சுமார் 150 மாணவர்கள் அருகில் உள்ள கிராமங்களில் உட்பட இருந்து வந்து மாணவ மாணவியர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

இங்கு பணிபுரிந்து வந்த தலைமையாசிரியர் ஜெயந்தி இந்த கல்வியாண்டு இடமாற்றம் செய்யப்பட்டதை அறிந்து அதனை ரத்து செய்யக்கோரி பெற்றோர்கள் மாணவர்களுடன் கடந்த திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.

இந்நிலையில் இன்று தமிழக முழுவதும் தொடக்கப் பள்ளிகள் கோடை விடுமுறைக்கு பின் தொடங்கப்பட்ட நிலையில் அந்த தலைமை ஆசிரியர் பணிக்கு வராததால் பள்ளியில் செல்லாமல், பெற்றோர்களுடன் மாணவர்கள் மீண்டும் அதே தலைமை ஆசிரியர் தங்கள் பள்ளிக்கு தேவை என கூறி பள்ளி வகுப்பினை புறக்கணித்துள்ளனர்.


இது குறித்து தகவல் அறிந்த சுங்குவார்சத்திரம் காவல் ஆய்வாளர் சங்கர் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்.

பெற்றோர்கள் கூறுகையில் தலைமை ஆசிரியை ஜெயந்தி இப்பள்ளிக்கு வராவிட்டால் அருகில் உள்ள கிராமங்களிலே நாங்கள் எங்கள் குழந்தைகளை சேர்த்துக் கொள்ளும் வகையில் டிசி பெற்று செல்வோம் என தெரிவித்து வருகின்றனர்

இந்நிலையில் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயந்தி பள்ளிக்கு வந்து பெற்றோர்கள் மாணவர்களுடன் சமாதான பேச்சு நடத்திய போது பெற்றோர்கள் கூறுகையில், தலைமையாசிரியை இடமாற்றத்தை ரத்து செய்து மீண்டும் அவர் இந்த பள்ளிக்கு வந்தால், தங்கள் குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்புவோம் எனவும் அது நடைபெறும் வரை நாங்கள் பள்ளிகளுக்கு அனுப்ப மாட்டோம் எனக்கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Updated On: 14 Jun 2023 5:45 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...