/* */

காஞ்சிபுரத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து மாணவிகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி

காஞ்சிபுரத்தில் நடந்து வரும் கண்காட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து மாணவிகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து மாணவிகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி
X

காஞ்சிபுரம் கண்காட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

காஞ்சிபுரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பாக காஞ்சிபுரத்தில் இந்திய சுதந்திர தினத்தின் 75வது ஆண்டை முன்னிட்டு அமுத பெருவிழா பல்துறை அலுவலகங்களின் சார்பில் கண்காட்சி அறிஞர் அண்ணா நினைவு நூற்றாண்டு பூங்கா வளாகத்தில் நேற்று தொடங்கியது.

இக் கண்காட்சி அரங்கில் சுதந்திர போராட்ட தியாகிகளின் திரு உருவப்படம் கண்காட்சி மற்றும் பல்வேறு அரசு துறைகளின் செயல்பாடுகள் குறித்த கண்காட்சியும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் துறை ரீதியான திட்டங்கள் குறித்தும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை தமிழக சிறு குறு தொழில் நிறுவனங்களின் அமைச்சர் தா. மோ. அன்பரசன் துவக்கி வைத்தார். இன்று 2-வது நாளில் காஞ்சிபுரம் நகரில் இயங்கும் பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி அந்த அரங்கத்தில் நடைபெற்றது.

இதில் தனியார் பள்ளியை சேர்ந்த மாணவிகள் பிளாஸ்டிக் ஒழிப்பு , சுற்றுச்சூழல் மற்றும் கேடு விளைவிக்கும் உணவு வகைகள் குறித்து ஆடல் பாடலுடன் நடனமாடி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியது அனைத்துத் தரப்பினரின் கவனத்தை ஈர்த்தது.

இதேபோல் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவிகள் கிராமிய கலை நிகழ்ச்சிகளும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வரலாற்று சிறப்புகளை பேச்சுக்களாலும் எடுத்துரைத்து விழாவை சிறப்பித்தனர்.

Updated On: 23 March 2022 1:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’