/* */

காஞ்சிபுரத்தில் சிறப்பு புலனாய்வுப்பிரிவு: எஸ்.பி சுதாகர் தொடக்கம்

இப்பிரிவின் மூலம் வழக்கு விசாரணை சுதந்திரமாகவும் விரைவாக முடிக்கும் வகையில் பிற பணிகள் ஏதும் தரப்படாதது குறிப்பிடத்தக்கது

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் சிறப்பு புலனாய்வுப்பிரிவு:  எஸ்.பி சுதாகர்  தொடக்கம்
X

சிவகாஞ்சி காவல் நிலையத்தில் சிறப்பு வழக்கு விசாரணை பிரிவினை  துவக்கி வைத்து வழக்கு விவரங்களை பார்வையிட்ட எஸ் பி சுதாகர் உடன் காவல்துறை உயர் அலுவலர்கள்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதல் முறையாக சிவகாஞ்சி காவல் நிலையத்தில் கொடுங் குற்ற வழக்குகளை விரைவாக விசாரிப்பதற்கான சிறப்பு புலனாய்வுப் பிரிவை எஸ்.பி எம்.சுதாகர் தொடக்கி வைத்தார்.

காவல்துறையினருக்கு சட்டம் ஒழுங்கை முறையாக பராமரிப்பது, ஊர்வலங்கள், திருவிழாக்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது என்பன உட்பட பல்வேறு பணிகள் உள்ளன. அவற்றையும் பார்த்துக் கொண்டு குற்ற வழக்குகளுக்கு புலன் விசாரணை செய்வதில் சிறு காலதாமதம் இருந்து வந்தது.

இந்நிலையில். உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படியும், காவல்துறையினருக் கான சீர்திருத்த சட்ட நடவடிக்கைகளில் ஒன்றாகவும் , மாவட்டத்தில் முதல் முறையாக சிவகாஞ்சி காவல் நிலையத்தில் சிறப்பு புலனாய்வுப் பிரிவு தொடங்கபட்டுள்ளது.இப்பிரிவில் ஆய்வாளர் நிலையில் உள்ள ஒரு அதிகாரியின் கீழ் ஒரு உதவி ஆய்வாளர் உட்பட மொத்தம் 12 பேர் பணியாற்றுவர். இவர்கள் கொடுங்குற்ற வழக்குகளின் விசாரணைகளை விரைந்து முடித்து தீர்வு காண்பது மட்டுமே இவர்களது பணியாகும்.

மாவட்டத்தில் முதல் முறையாக சிவகாஞ்சி காவல் நிலையத்தில் தொடங்கப்பட்டுள்ளது.இப்பிரிவினரின் செயல்பாடுகளை ஆய்வு செய்து மாவட்டத்தில் உள்ள மற்ற காவல் நிலையங்களுக்கும் இப்பிரிவு தொடங்க ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் எஸ்பி.எம்.சுதாகர் தெரிவித்தார்.

முன்னதாக சிவகாஞ்சி காவல் ஆய்வாளர் விநாயகத்திடம் சிறப்பு புலனாய்வுப்பிரிவு தொடங்கப் பட்டதற்கான அரசு உத்தரவையும் வழங்கினார்.இந்நிகழ்வின் போது ஏடிஎஸ்பி க்கள் வினோத்சாந்தாராம், சந்திரசேகரன், டிஎஸ்பி ஜூலியஸ் சீசர் உட்பட காவல்துறை அதிகாரிகள் பலரும் உடன் இருந்தனர்.

இதன் சிறப்பு அம்சங்கள்: புலனாய்வுப் பிரிவு மற்றும் சட்டம் ஒழுங்குப் பிரிவு எனப் பிரிப்பது விசாரணைச் செயல்பாட்டில் நிபுணத்துவம் பெற வழிவகுக்கும் .தனி விசாரணைப் பிரிவின் விளைவாக, வேறு எந்தத் துறையின் பணிகளையும் செய்ய காவல்துறை அதிகாரிகள் அழைக்கப்பட மாட்டார்கள்.

உதாரணமாக, விசாரணைக் குழுவில் பணிபுரியும் ஒரு போலீஸ் அதிகாரி சட்டம் மற்றும் ஒழுங்குப் பணிகளைச் செய்ய அழைக்கப்படமாட்டார்.நமது நாடு தொடர்ந்து வளர்ச்சியடைந்து நகரமயமாகி வரும் தற்போதைய சூழ்நிலையில், அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணுவதற்கும், குற்றவியல் குற்றங்களை விசாரிப்பதற்கும் இடையே சமநிலையைப் பேணுவது காவல் துறைக்கு மிகவும் கடினமாக உள்ளது..

காவல்துறை பிரிவுகளை பிரிப்பது, சமூகத்தின் அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், விரைவான விசாரணை செயல்முறையை ஒரே நேரத்தில் உறுதிப்படுத்துவதற்கும் காவல்துறைக்கு உதவும் என்பதால் இதை வரவேற்கலாம்.காவலர் பிற பணிகளுக்கு செல்ல வேண்டியது என்பது தவிர்க்கப்பட்டு, இதில் கவனம் செலுத்தும் நிலையில் குற்ற எண்ணிக்கை வெகுவாக குறையும் .

இந்நிலையில் ஏற்கனவே காவல்துறையில் உள்ள காலி பணியிடங்களை விரைவாக நிரப்பும் நிலையில் புதிய இளைஞர்கள் தற்போதைய விஞ்ஞான வளர்ச்சிக்கு ஏற்ப பிறவி துறையினருக்கும் அவர்கள் பல்வேறு ஆலோசனை வழங்க ஏதுவாக இருக்கும் என்பதால் அரசு இதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

Updated On: 16 Nov 2022 3:30 PM GMT

Related News