/* */

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை 68 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கைது எஸ்.பி சுதாகர்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை சரித்திர பதிவேடு குற்றவாளிகள் 68 பேரை போலீசார் கைது செய்துள்ளதாக எஸ்பி சுதாகர் தெரிவித்தார்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை 68 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கைது  எஸ்.பி சுதாகர்
X

 காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.சுதாகரன் ( பைல் படம்)

காஞ்சிபுரம் காவல் மாவட்டம் என்பது காஞ்சிபுரம் வாலாஜாபாத் உத்தரமேரூர் சுங்குவார்சத்திரம் ஸ்ரீபெரும்பத்தூர் சோமங்கலம் ஒரகடம் என பல பகுதிகளை உள்ளடக்கியுள்ளது.

இதில் ஸ்ரீபெரும்புதூர் கோட்டம் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளதாலும் சென்னையை ஒட்டி இதன் எல்லைகள் அமைந்துள்ளதால் குற்ற செயல்கள் கண்காணிப்பதில் காவல்துறைக்கு பெரும் சிக்கலான ஒன்று.

தொழிற்சாலைகளில் ஒப்பந்தப் பணி பெறுவதில் கடும் போட்டி காரணமாக குற்ற செயல்கள் அதிகரித்து காணப்படும்.

இந்நிலையில் புதியதாக காஞ்சி சரக காவல்துறை துணைத் தலைவர் எம் சத்திய பிரியா மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக எம்.சுதாகர் பொறுப்பேற்றதும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் குற்றச்செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வரும் ரவுடிகளை கைது செய்ய அந்தந்த காவல் நிலைய ஆய்வாளர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

இதனால் குற்ற செயல்கள் குறையும் என்பதும் பொதுமக்கள் பயமின்றி வாழ வழிசெய்யும் வகையில் இருக்கும்.

அவ்வகையில் கடந்த ஜனவரி மாதம் முதல் இந்நாள்வரை பல்வேறு கொலை, கொலைமுயற்சி, கொள்ளை, மிரட்டல், வழிப்பறி என பல்வேறு வழக்குகளில் சிக்கிய 68 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகரன் தெரிவித்துள்ளார்.

இனி வரும் காலங்களில் பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டாலும், பெண்கள், குழந்தைகள் இவர்களை துன்புறுத்தினால் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Updated On: 18 July 2021 2:45 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்