/* */

சிறிய அளவிலான கைத்தறி பூங்கா: தொழில் முனைவோர்களுக்கு அரிய வாய்ப்பு

10 இடங்களில் அரசு நிதி உதவியுடன், சிறிய அளவிலான கைத்தறி பூங்காக்கள் (Mini Handloom Parks) அமைக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளது.  

HIGHLIGHTS

சிறிய அளவிலான கைத்தறி பூங்கா:   தொழில் முனைவோர்களுக்கு அரிய வாய்ப்பு
X

நெசவுத் தொழிலில் இந்தியாவிலேயே தமிழகம் தனிச்சிறப்புடன் விளங்குகிறது. பல்லாயிரம் ஆண்டுகால வரலாறு கொண்ட பாரம்பரிய நெசவுத்திறனுக்குப் பெயர்போன நமது மாநிலத்தில் புதிதாக ' சிறிய கைத்தறி பூங்காக்கள்' அமைக்கப்படுவதாக அறிவித்திருக்கிறது அரசு. இவை பாரம்பரிய கைத்தறி நெசவாளர்களைப் பாதுகாக்க உதவுவதுடன், இந்தத் துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவும் வாய்ப்பாக அமையும்.

ஜவுளித்துறையில் முன்னோடி மாநிலங்களுள் ஒன்றாக விளங்கும் தமிழ்நாட்டில் ஜவுளித்துறையின் கட்டமைப்பை வலுப்படுத்த அரசு செயல்படுத்தி வரும் பல திட்டங்களுள் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்கா அமைக்கும் திட்டமும் ஒன்றாகும்.

சிறிய அளவிலான தொழிற்பூங்காக்கள் அமைப்பதன் மூலம் நடுத்தர நிறுவனங்களின் மூலம் தொழில் வளர்ச்சி ஏற்பட்டு வேலைவாய்ப்பு பெருகும். மேலும் அதிகளவில் அந்நியச் செலவாணி ஈட்டுவதற்கு வாய்ப்புகள் ஏற்படும். இது தமிழக முதல்வரின் கனவுத் திட்டம் ஆகும். இதன் காரணத்தால் தமிழ்நாட்டின் ஜவுளித் தொழில் வளர்ச்சிப் பெருகி வேலைவாய்ப்புகள் அதிகரிக்க தமிழ்நாடு அரசால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில், தமிழ்நாட்டின் பாரம்பரியம் மிக்க கைத்தறி நெசவு தொழிலை பாதுகாத்து கைத்தறி துணி இரகங்கள் உற்பத்தியை பெருக்கிட அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 10 இடங்களில் அரசு நிதி உதவியுடன், சிறிய அளவிலான கைத்தறி பூங்காக்கள் (Mini Handloom Parks) அமைக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் வரையறையின்படி, 100 கைத்தறிகள் அமைத்து, அதற்குத் தேவையான தொழிற்கூடம், Preloom, Post Loom மற்றும் Godown வசதி அமைத்து, மின்சார இணைப்பு, குடிநீர் இணைப்பு, கழிவுநீர் இணைப்பு உள்ளிட்ட அனைத்து கட்டுமான வசதிகளை தொழில் முனைவோர்கள் பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக பொது வசதி மையங்கள் (CFC) உருவாக்கப்பட்டு, தொழில் முனைவோர் தேவைக்காக தயார் படுத்தப்பட்டு வருகிறது.

விருப்பமுள்ள தொழில் முனைவோர்கள் / மொத்த விற்பனையாளர்கள் / சில்லறை விற்பனையாளர்கள் / கூட்டுறவு சங்கங்கள் / சங்கங்கள் / தொழில்முனைவோர் மற்றும் மாஸ்டர் வீவர் நெசவாளர்கள் ஆகியோர் அடங்கிய சிறப்பு நோக்கு முகமை (SPV) அமைத்து, நல்லதொரு வியாபார சந்தை, டிசைன் தொழில்நுட்பம் மற்றும் கைத்தறி துணி இரகங்கள் உற்பத்தி செய்யத் தேவையான நடைமுறை மூலதனம் ஆகியவற்றைக் கொண்டு வந்து, மேற்படி பொது வசதி மையத்தில் (CFC) உற்பத்தியை மேற்கொண்டு பயனடையலாம்.

கைத்தறி துணி உற்பத்தியில் ஈடுபட்டு வருவோர், காஞ்சிபுரத்தில் அமைக்கப்படவுள்ள, மேற்படி சிறிய அளவிலான கைத்தறி பூங்காக்கள் மூலம் உற்பத்தி மேற்கொண்டு, நெசவாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பது மட்டுமின்றி, தங்கள் தொழில் நல்ல முன்னேற்றம் அடைந்து, ஏற்றுமதி செய்யவும் வாய்ப்புள்ளது.

இந்த அரிய வாய்ப்பை பெற்றிட, விருப்பமுடையோர் www.loomworld.in என்ற இணையதள முகவரியில் உரிய படிவத்தில் 22.02.2024-க்குள் விண்ணப்பிக்கமாறு மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்கள்.

Updated On: 16 Feb 2024 11:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மிதுன ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. லைஃப்ஸ்டைல்
    சிவபெருமான் பற்றிய மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழைப்பழ தோலில் இவ்ளோ நன்மைகளா..? தோலை இனிமே வீசமாட்டோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    ஒன்றாக இருப்பதன் சக்தி: திருமணம் பற்றிய மேற்கோள்கள்
  5. தொழில்நுட்பம்
    அமேசானின் கோடை விருந்து: மே 2ல் மாபெரும் சலுகை!
  6. வீடியோ
    குஜராத்தில் பிடிபட்ட போதை பொருள் | H Raja பரப்பரப்பு பேட்டி |#hraja...
  7. லைஃப்ஸ்டைல்
    மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து உண்பதின் அவசியம் என்ன..?...
  8. லைஃப்ஸ்டைல்
    10 ஆண்டு திருமண நாள் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. நாமக்கல்
    திருச்செங்கோடு நகராட்சி குப்பைக்கிடங்கில் தீ விபத்து: மாவட்ட ஆட்சியர்...
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் கிளியே காதல் கிளியே, உன்னை நான் காதலிக்கலையே...! - மறைமுக...