/* */

ரூ500 லஞ்சம் வாங்கியதற்காக ஆறு ஆண்டுகள் சிறை.. ரூ 40 ஆயிரம் அபராதம்..

பிறப்பு சான்றிதழ் கேட்டவரிடம் 500 ரூபாய் லஞ்சம் கேட்டதால் கடந்த மார்ச் மாதம் ஊழியர் லோகநாதன் கைதானார்

HIGHLIGHTS

ரூ500 லஞ்சம் வாங்கியதற்காக ஆறு ஆண்டுகள் சிறை.. ரூ 40 ஆயிரம் அபராதம்..
X

பைல் படம்

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை தாலுக்கா, மெய்யூர் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின் அண்ணன் மகன் பிரேம்குமார் என்பவரை பள்ளியில் சேர்ப்பதற்கு பிறப்பு சான்றிதழ் தேவைபட்டதால் மேற்படி சுரேஷ் கடந்த 07.03.2011-ந் தேதி திருவள்ளூர் நகராட்சி அலுவலகத்திற்கு சென்று அவரின் அண்ணன் மகனின் பிறப்பு சான்றிதழ் சம்பந்தமாக கேட்டபோது நகராட்சி அலுவலகத்தில் பணியிலிருந்தவர் அவரது அண்ணன் மகன் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் பிறந்ததால் அங்கு சென்று அவரது பிறந்த விவரங்களை வாங்கி வரும்படி தெரிவித்துள்ளார்.

அதன் வகையில் கடந்த 09.03.2011- தேதி திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் உள்ள இணை இயக்குநர், சுகாதாரத்துறை அலுவலகத்திற்கு சென்று அங்கு பணியில் இருந்த இளநிலை உதவியாளர் லோகநாதனை, சந்தித்து நகராட்சி அலுவலகத்தில் தெரிவித்த விவரத்தினை கூறி அவர் அண்ணன் மகன் பிறந்த விவரங்களை கேட்டுள்ளார்.

அப்போது அங்கு பணியில் இருந்த லோகநாதன் என்பவர் சிறுவனின் பிறந்த விவரங்களை கொடுப்பதற்காக தனக்கு லஞ்சமாக பணம் ரூ.500/- கொடுத்தால்தான் விவரத்தை கொடுப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

பின்னர் புகார்தாரர் சுரேஷ் என்பவர் காஞ்சிபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகத்திற்கு வந்து திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் உள்ள இணை இயக்குநர், சுகாதாரத்துறை அலுவலகத்தில்பணிபுரியும் இளநிலை உதவியாளர் லோகநாதன், என்பவர் தனது அண்ணன் மகன் பிரேம்குமார் என்பவரின் பிறப்பு விவரங்களை தருவதற்கு ரூ.500/- லஞ்சம் கேட்பதாக கொடுத்த புகாரின் அடிப்படையில் லோகநாதன் மீது, காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு துறையில் காவல் ஆய்வாளர் வெங்கடேசன் என்பவரால் கடந்த 28.03.2011-ந் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டு, பொறி வைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, அன்றைய தினமே, புகார்தாரர் சுரேஷ் என்பவரிடம் எதிரி லோகநாதன் பணிபுரியும் அலுவலகத்தில் லஞ்சப்பணம் ரூ.500/-ஐ கேட்டு பெற்றபோது கையும் களவுமாக பிடித்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது.

இவ்வழக்கில் சாட்சிகளை விசாரணை செய்து லோகநாதன் என்பவரின் மீது திருவள்ளூர் முதன்மை குற்றவியல் நடுவர் மற்றும் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை மீது தாக்கல் செய்யப்பட்டது.

மேற்படி வழக்கினை திருவள்ளூர் முதன்மை குற்றவியல் நடுவர் மற்றும் சிறப்பு நீதிபதி , வழக்கினை விசாரணை செய்து இன்று 04.01.2023-ந்தேதி எதிரி லோகநாதன் என்பவர் புகார்தாரரிடமிருந்து லஞ்சமாக பணம் கேட்ட குற்றத்திற்காக 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், மற்றும் ரூ.20,000/-ம் அபராதமும், மேலும் பணத்தை கேட்டு பெற்றுக்கொண்ட குற்றத்திற்காக 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.20,000/-ம் அபராதமும் விதித்து உத்திரவிடப்பட்டது.ரூபாய் 500 லஞ்சம் வாங்கிய வழக்கில் 6 ஆண்டு சிறை மற்றும் 40 ஆயிரம் அபராதம் விதித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Updated On: 4 Jan 2023 3:45 PM GMT

Related News