/* */

காஞ்சிபுரத்தில் வெள்ளி ரதம், மரத்தேரில் ஏகாம்பரநாதர் வீதி உலா

காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில் பிரம்மோற்சவத்தில் ஆறாம் நாள் இரவு வெள்ளி தெரியும் ஏழாம் நாள் காலை மரத்தேரிலும் வீதி உலா நடைபெறுகிறது.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் வெள்ளி ரதம், மரத்தேரில் ஏகாம்பரநாதர் வீதி உலா
X

ஸ்ரீ ஏகாம்பரநாதர் திருக்கோயில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழாவில் ஏழாம் நாள் இன்று காலை மரத்தேரில் ஸ்ரீ ஏகாம்பரநாதர் வீதி உலா வந்தார்.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவில் பங்குனி உத்திர திருவிழா 6-ஆம் நாள் இரவு வெள்ளி ரதத்திலும் , இன்று காலை மரத்தேரிலும் எழுந்தருள மகிழ்ச்சியுடன் குவிந்த மக்கள் வெள்ளத்தில் ஏலவார்க் குழலி அம்மனுடன், ஏகாம்பரநாதர் 4 ராஜ வீதிகளில் உலா வந்தார்.

பஞ்சபூத ஸ்தலங்களில் பிருத்வி எனும் மண் ஸ்தலமாக விளங்கும் மூவாயிரம் ஆண்டுகள் பழமையான காஞ்சிபுரம் ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் திருக்கோவிலில் பங்குனி உத்திர திருக்கல்யாணப் பிரம்மோற்சவம் பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.


கடந்த ஆறு நாட்களாக காலை மற்றும் மாலை வேலைகளில் பலவண்ண மாலைகள் சூடி அருள்மிகு ஏலவார் குழலி விநாயகர் பாலமுருகன் உள்ளிட்டோருடனா ஸ்ரீ ஏகாம்பரநாதர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு ராஜ வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்தார்.


அவ்வகையில்பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழா உற்சவத்தின் ஆறாம் நாள் இரவு வெள்ளி ரத உற்சவத்தில் ஏகாம்பரநாதர், ஏலவார்க் குழலி அம்மனுக்கு, சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து, ஏகாம்பரநாதருக்கும், ஏலவார்க் குழலி அம்மனுக்கும் மல்லிகைப்பூ, மனோரஞ்சித பூ, ரோஜா பூ, உள்ளிட்ட பஞ்சவர்ண பூ, மலர் மாலைகள் சூட்டி, திருவாபரணங்கள் அணிவித்து, மின்விளக்குகள் மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட 33அடி உயரம் உள்ள வெள்ளிக் தேரில் எழுந்தருள செய்து நான்கு ராஜ வீதிகளில் திருவீதி உலா செல்லும் வெள்ளித் தேர் உற்சவம் நடைபெற்றது.

6ம் நாள் உற்சவத்தின் முக்கிய நிகழ்வில் மின்விளக்குகள் மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளித் தேரில் ஏலவார்க் குழலி அம்மனுடன் ஏகாந்தமாய் ஏகாம்பரநாதர் சுவாமி மேள,தாள,சிவ வாத்தியங்கள் ஒலிக்க உற்சவத்தை காண மகிழ்ச்சியுடன் குவிந்த மக்கள் வெள்ளத்தில் நீந்திய வாறு சென்ற வெள்ளித்தேர் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

நான்கு ராஜ வீதிகளில் வெள்ளித் தேரில் உலா வந்த ஏகாம்பரநாதர் ஏலவார்குழலி அம்மனை நள்ளிரவு நேரத்திலும் திரளான பக்தர்கள் குவிந்து வழியெங்கும் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வணங்கி வழிபட்டு சென்றனர்.

இதனைத் தொடர்ந்து இன்று ஏழாம் நாள் காலை உற்சவத்தில் மர தேரில் ஸ்ரீ ஏகாம்பரநாதர் எழுந்தருள மேளதாளம் முழுங்க பக்தர்கள் வடம் பிடிக்க பல்வேறு முக்கிய பிரமுகர் பங்கேற்று தேர்த்திருவிழாவை துவக்கி வைத்தனர்.

இந்த தேர் நான்கு ராஜ வீதிகளில் தற்போது வலம் வந்து பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 1 April 2023 4:15 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    DMK-வின் மூன்றாண்டு ஆட்சி எல்லா பக்கமும் கள்ளச்சாராயம் கஞ்சா தான்...
  2. லைஃப்ஸ்டைல்
    தங்கை திருமண நாள் வாழ்த்துக்கள்: மனதைத் தொடும் வாழ்த்துச் செய்திகள்
  3. லைஃப்ஸ்டைல்
    மூன்று முடிச்சால் இரண்டு மனங்கள் ஒரு மனதாகும் திருமணம்..!...
  4. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்களின் வகைகளும் மேற்கோள்களும்
  5. வீடியோ
    சிறை கண்காணிப்பாளர் தான் என் கையை உடைத்தார்- SavukkuShankar !...
  6. லைஃப்ஸ்டைல்
    அம்மாவின் பிறந்தநாளில் அன்பின் அலைகள்!
  7. சேலம்
    மேட்டூர் அணை நீர்மட்டம் 50.78 அடியாக சரிவு..!
  8. வீடியோ
    🔴LIVE : சிறை தான் உனக்கு சமாதி என காவல் துறை மிரட்டல் சவுக்கு சங்கர்...
  9. கோவை மாநகர்
    சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் என் கையை உடைத்தார்: சவுக்கு...
  10. தேனி
    தேனியில் குப்பை சேகரிக்கும் பணி: இந்து எழுச்சி முன்னணி அதிருப்தி