/* */

காஞ்சிபுரம் செவிலிமேடு பள்ளியில் ஆசிரியர்கள் மெத்தனம்: மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி கடும் கோபம்..!

செவிலிமேடு அரசு உயர்நிலைப்பள்ளியில், முதன்மை கல்வி அதிகாரி நடத்திய திடீர் ஆய்வில், பள்ளி மாணவர் நோட்டில் , ஆசிரியர் எவ்வித திருத்தமும் செய்யாமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் செவிலிமேடு பள்ளியில் ஆசிரியர்கள் மெத்தனம்: மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி கடும் கோபம்..!
X

காஞ்சிபுரத்தில் முதன்மைக்கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி ஆய்வு நடத்திய செவிலிமேடு அரசு உயர்நிலைப்பள்ளி.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட செவிலிமேடு பகுதியில் இயங்கி வருகிறது அரசினர் உயர்நிலைப்பள்ளி. இங்கு 250க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள், ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயின்று வருகின்றனர். இந்நிலையில் இங்கு பயிலும் மாணவர்களுக்கு பயில வசதியாக மேஜை-நாற்காலிகள், காஞ்சிபுரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.செல்வம் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இதில் அடலம் மன்ற உறுப்பினர் செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் க.சுந்தர் , சி.வி.எம்.பி.எழிலரசன், மேயர் மகாலட்சுமி யுவராஜ் , மண்டலக்குழு தலைவர் மோகன் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி முடிவுற்ற பின்னர், முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி, பள்ளி வகுப்பறையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஒரு வகுப்பறையில் உள்ள மாணவர்களிடம் பாடங்கள் குறித்து கேட்டபோது எந்த ஒரு பதிலும் அளிக்கவில்லை. மேலும் பள்ளி மாணவனின் நோட்டு புத்தகத்தை ஆய்வு செய்தபோது அதில் எந்த ஒரு திருத்தங்களும் ஆசிரியர் மேற்கொள்ளாதது கண்டு முதன்மைக்கல்வி அலுவலர் அதிர்ச்சி அடைந்தார்.

கடும் கோபம் அடைந்த அவர், உடனடியாக தலைமை ஆசிரியரை அழைத்து பள்ளி திறக்கப்பட்டு 20 நாட்கள் ஆகும் நிலையில் மாணவனுக்கு ஒரு வார்த்தை கூட பாடம் குறித்து தெரியவில்லையே என கேட்டபோது புதிதாக பொறுப்பு ஏற்றதால் இனி வரும் காலங்களில் கண்காணிப்பதாக தெரிவித்தார். இதையடுத்து, முதன்மைக்கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி விழாவிற்கு வந்த பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.


Updated On: 30 Jun 2022 6:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நிமிர்ந்து நில்..! மலைகூட மடுவாகும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் 15வது திருமண நாள் வாழ்த்துகள்
  3. ஆவடி
    அடுக்குமாடி குடியிருப்பில் தவறி விழுந்த குழந்தையை காப்பாற்றும் வீடியோ...
  4. வானிலை
    ஊட்டிக்கே இந்த நிலைமைனா? மத்த ஊரை யோசித்து பாருங்க!
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிமையை தேட புத்த மொழிகள்!
  6. வணிகம்
    கடன் தொல்லையில்லாமல் வாழ இப்படி ஒரு வழி இருக்கா?
  7. வணிகம்
    பணத்தை இப்படி சேமித்தால்.... ஓஹோன்னு வாழலாம்...! எப்படி?
  8. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!
  9. வணிகம்
    கடனில் மூழ்கி வாழ்க்கை போச்சா? மீள ஒரு வழி இருக்கு!
  10. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்