/* */

போலீஸ் எஸ்.பி. சண்முகம் தலைமையில் காஞ்சிபுரத்தில் சமத்துவ பொங்கல் விழா

காஞ்சிபுரம் மாவட்ட அண்ணா காவல் அரங்கில் இந்து முஸ்லிம் கிறிஸ்தவர் என அனைவரும் ஒருங்கிணைந்து சமத்துவ பொங்கல் கொண்டாடினர்.

HIGHLIGHTS

போலீஸ் எஸ்.பி. சண்முகம் தலைமையில் காஞ்சிபுரத்தில் சமத்துவ பொங்கல் விழா
X
காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

தமிழர் தமிழர்களின் பாரம்பரிய பண்டிகைகள் அனைத்தும் அறிவியல் பூர்வமானவை என்பதும் அனைத்து சமுதாய தரப்பினரும் இணைந்து பொங்கல் கொண்டாடுவது சிறப்பாக உள்ளதாக காஞ்சிபுரத்தில் நடைபெற்ற காவல்துறை சமத்துவ பொங்கல் விழாவில் பாதிரியார் பேசினார்.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை உலகெங்கும் உள்ள தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. அதைத்தொடர்ந்து மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என தொடர்ந்து நான்கு நாட்களுக்கு இன்று முதல் பொங்கல் கொண்டாட்டங்கள் தமிழகத்தில் களை கட்டி காணப்படும்.


மேலும் தமிழக அரசு அனைத்து அரசு துறை அலுவலர்களும் சமத்துவ பொங்கல் கொண்டாடி மகிழ வேண்டுமென அறிவுறுத்தியது. அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம் தலைமையில் அண்ணா காவல் அரங்கில் புது பானையில் பச்சரிசி வெல்லம் உள்ளிட்டவை கொண்டு பொங்கல் பொங்கி சூரிய பகவானுக்கு படையல் இட்டு விழா கொண்டாடப்பட்டது.

இதில் காஞ்சிபுரம் சி.எஸ்.ஐ. சர்ச்சை சேர்ந்த ஆயர், ஜமாத்தை சேர்ந்த கமால், சங்கர மடம் மற்றும் காமாட்சி அம்மன் திருக்கோவிலில் சேர்ந்த சிவாச்சாரியார்கள் என பலரும் சமத்துவ பொங்கலில் பங்கேற்று சிறப்பித்தனர்.

இதில் பேசிய ஆயர் , தமிழில் பாரம்பரிய பண்டிகைகள் அனைத்தும் அறிவியல் பூர்வமானவை என்பதும் அதனை ஆக்கபூர்வமாக எடுத்துக்கொண்டு செயல்பட்டால் நோயின்றி வாழலாம். குறிப்பாக பெண்களுக்கு இளம் வயது முதல் திருமண பருவம் வரை அனைத்து சடங்குகளிலும் பாரம்பரியங்களும் அறிவிலும் இணைந்தே உள்ளதால் கடந்த காலங்களில் நலமுடன் இருந்தனர்.

அந்த பாரம்பரியம் மூலம் நோயின்றி வாழும் வழியை கற்றுத் தந்தும் அனைத்து சமூகத்தினரும் இணைந்து வழிபடவும் வழிவகை செய்யப்பட்டது மகிழ்ச்சியை அளிக்கிறது என தெரிவித்தார்.

இவரது பேச்சு அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்து அனைவரும் மகிழ்ச்சியுடன் பொங்கல் திருநாளை கொண்டாடியும் பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற நபர்களுக்கு பரிசுகளும் எஸ்.பி சண்முகம் வழங்கினார்.

Updated On: 14 Jan 2024 12:57 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!