/* */

சாலைப் பணிகள் தாமதத்திற்கு நில எடுப்பு, மற்றும் வனத்துறை அனுமதியே காரணம்‌: அமைச்சர் எ.வ.வேலு

சாலைப் பணிகள் தாமதத்திற்கு நில எடுப்பு மற்றும் வனத்துறை அனுமதியே காரணம் என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

HIGHLIGHTS

சாலைப் பணிகள் தாமதத்திற்கு நில எடுப்பு, மற்றும் வனத்துறை அனுமதியே  காரணம்‌: அமைச்சர் எ.வ.வேலு
X

காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களின் பொதுப்பணித்துறையின் ஆய்வுக் கூட்டம் அமைச்சர் அ.வ.வேலு தலைமையில் நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் காஞ்சிபுரம் , செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நடைபெற்றுவரும் நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தென் சென்னை மற்றும் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மூன்று மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதி உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்கள் பகுதியில் உள்ள நிலுவை பணிகள் குறித்தும் தேவைகள் குறித்தும் எடுத்துரைத்தனர்.

அதன் பின் அதற்கு உரிய விளக்கங்களை இரு துறை அலுவலர்கள் தற்போதைய நிலை குறித்து விளக்கினர். அதன்பின் பேசிய தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு தற்போது திட்டமிடப்பட்ட பணிகள் குறித்து எடுத்துரைத்தார்.

இதன்பின் செய்தியாளர் கூட்டத்தில் , தமிழகத்தில் கடந்த 10 ஆண்டு காலமாக எந்த பெரிய பணிகளும் நடைபெறவில்லை என்றும்,

இப்பணிகள் காலதாமதத்திற்கு வனத்துறை அனுமதி மற்றும் நில எடுப்பு விவகாரங்கள் தான் எனவும் , விரைவில் மக்கள் பிரதிநிகள் கோரிக்கைகளான சுரங்கப்பாதை மேம்பாலம் , ரயில்வே கடவு பாலம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப படும் எனவும் தெரிவித்தார்

தமிழகத்தில் எம் சாண்ட் தொழிற்சாலைக்கு புதிய நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கவில்லை எனவும் இதற்கு அனுமதி அளிக்க தலைமைப் பொறியாளர் அளவிலான குழுவினரின் வழிகாட்டுதலின்படி அனுமதி அளிக்கப்படுகிறது. எனவே இதில் எந்த ஒரு முறைகேடும் நடைபெறவில்லை என தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மூன்று மாவட்ட ஆட்சியர்கள் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் துறை செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 14 July 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்