/* */

வாகனங்கள் செல்ல மாற்று வழி கோரி குவாரி உரிமையாளர்கள் எஸ்பியிடம் மனு

காஞ்சிபுரத்தில் கிரஷர் மற்றும் குவாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் மாற்றுவழிக் கோரி மாவட்ட எஸ்பி எம்.சுதாகரிடம் மனு அளித்தனர்.

HIGHLIGHTS

வாகனங்கள் செல்ல மாற்று வழி கோரி குவாரி உரிமையாளர்கள் எஸ்பியிடம் மனு
X

கிரஷர் மற்றும் குவாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் மாற்று சாலை வழிக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.சுதாகரிடம் மனு அளித்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஆர்ப்பாக்கம் மற்றும் ஆதரவு கிராமங்களில் கிரஷர் மற்றும் குவாரியில் இருந்து ஜல்லி, எம்சாண்ட், மற்றும் கனிமங்களை ஏற்றி வரும் வாகனங்களை கோரிக்கை கூட்டு ரோடு வழியாக வாலாஜாபாத் மற்றும் சென்னை செல்ல கடந்த ஏப்ரல் 14 முதல் தடை செய்யப்பட்டது.

இதனால் பல கிரஷர், குவாரிகளிலும் நூற்றுக்கணக்கான லாரிகள், அதில் வேலை பார்க்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் மற்றும் அவர்களின் வாழ்வாதாரம் முடக்கும் அபாயம் உள்ளதால் அரசு தங்களுக்கு மாற்றுவழியில் செல்ல அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் மாகறல் இருந்து காவாந்தண்டலம் வழியாக வாலாஜாபாத் செல்ல அனுமதித்தால் ஓரிக்கை வழியாக செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை குறையும்.

செவிலிமேடு - பெரியார் நகர் போக்குவரத்து நெரிசலை 80% வரை தவிர்க்கலாம் எனவும், பல வருடங்களாக காவாந்தண்டலம் சாலை வழியைப் பயன்படுத்தி வந்த நிலையில் மீண்டும் அவ்வழியில் லாரிகள் அனுமதிக்க மனுவில் கோரிக்கையாக தெரிவித்துள்ளனர். இம்மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.சுதாகரன் இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் கலந்து ஆலோசித்து உரிய வழிமுறை செய்யபடும் என்று தெரிவித்தார்.

Updated On: 13 May 2022 7:00 AM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  3. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  4. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  6. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  8. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  10. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்