/* */

தரமான கலப்படமற்ற கார இனிப்பு வகைகளை தயாரிக்க வேண்டும் : மாவட்ட ஆட்சியர்

தீபாவளி நெருங்கி வரும் நிலையில் தரமற்ற கலப்பட பொருட்களைக் கொண்டு இனிப்பு தயாரிக்க கூடாது என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்

HIGHLIGHTS

தரமான கலப்படமற்ற கார இனிப்பு வகைகளை தயாரிக்க வேண்டும் : மாவட்ட ஆட்சியர்
X

காஞ்சிபுரம் தனியார் கலை அறிவியல் கல்லூரியில் கலப்பட விழிப்புணர்வு குறித்து மாணவ மாணவிகளுக்கு எடுத்துரைத்த உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் அனுராதா

இன்னும் சில நாள்களில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், தீபாவளிக்கு மக்கள் மிகவும் விரும்பி வாங்கும் பொருட்களில் முக்கியமான ஒன்று இனிப்பு வகைகள்தான்.

இந்த இனிப்புகளை உண்ணும் போது பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதால், இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளால், பொதுமக்கள், கல்லூரி, பள்ளி மாணவ, மாணவிகளிடையே கலப்பட பொருட்கள் உண்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

கலப்படம், செயற்கை நிறமி கூடாது: தீபாவளியை முன்னிட்டு இனிப்பு, கார வகைகள் மற்றும் பேக்கரி உணவு பொருட்களை தயாரிப்பவர்கள் தரமான மூலப்பொருட்களைக் கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து பாதுகாப்பாக உணவு பொருட்களை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். உணவு பாதுகாப்பு துறையின் மூலம் பதிவு (அ) உரிமம் பெற்றிருக்க வேண்டும்

தீபாவளி பண்டிகையில் இனிப்பு மற்றும் கார வகைகளுக்கு சீட்டு நடத்துபவர்கள், தற்காலிகமாக திருமண மண்டபங்களில் பெரிய அளவில் இனிப்பு, கார வகைகளை தயாரிக்கும் நிறுவனங்கள் உள்பட அனைத்து இனிப்பு கார வகைகள் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் உணவு பாதுகாப்பு துறையில் பதிவு செய்து உரிமம் பெற்று பொதுமக்களுக்கு விநியோகம் செய்வது, உணவு பாதுகாப்பு சட்டம் மற்றும் விதிகளில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மேலும், இனிப்பு, கார வகைகள் மற்றும் பேக்கரி உணவு பொருட்களை தயாரிப்பவர்கள் தரமான மூலப் பொருட்களைக் கொண்டு தயாரித்து பாதுகாப்பான உணவு பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கவேண்டும். உணவு தயாரிப்பில் கலப்படமான பொருட்களையோ, சட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமான செயற்கை நிறமிகளையோ உபயோக்கிக்கக் கூடாது. இனிப்பு, கார வகைகளை தயாரிக்கும் உணவை கையாள்பவர்கள் முழு உடல் நலத்துடன் தொற்று நோய்கள் இல்லா வண்ணம் பணியில் அமர்த்தப்பட வேண்டும். ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய் மறுபடியும் சூடுபடுத்தி உணவு தயாரிக்க பயன்படுத்தக்கூடாது.

முறையான பயிற்சி :பேக்கிங் செய்யப்பட்ட உணவு பொருட்களுக்கு விவரச் சீட்டு இடும் பொழுது அதில் தயாரிப்பாளரின் முழு முகவரி, உணவு பொருளின் பெயர், தயாரிப்பு அல்லது பேக்கிங் செய்யப்பட தேதி, சிறந்த பயன்பாட்டு காலம் (காலாவதியாகும் காலம்) சைவ மற்றும் அசைவ குறியீடு ஆகியவற்றை அவசியம் குறிப்படவேண்டும்.விற்பனைக்காக காட்சிப்படுத்தப்படும் தட்டுகளில் இனிப்பு வகைகளை தயாரித்த தேதி மற்றும் உபயோகிக்கும் காலம் ஆகியவை பொதுமக்கள் அறியும் வண்ணம் அச்சடித்து காட்சிப் படுத்தவேண்டும்.

உணவு பொருட்களை விற்பனை செய்த பின்னர் வழங்கும் ரசீது, பில்களில் உணவு அங்காடியின் உரிமம் எண் அல்லது பதிவு எண்ணை அச்சடித்து இருத்தல் வேண்டும்.உணவு பொருட்களை ஈக்கள், பூச்சிகள் மற்றும் கிருமி தொற்று இல்லாத சுகாதாரமான சூழலில் பொதுமக்களுக்கு விற்பனை செய்யவேண்டும்.

பண்டிகை காலத்தில் மட்டும் பலகாரங்கள் தயாரிப்பவர்கள் உள்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனை யாளர்களும் உடனடியாக http://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006ன் கீழ் தங்களது வணிகத்தினை பதிவு உரிமம் பெற்றுக் கொள்ளவேண்டும்.

மேலும் இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரிப்பாளர்கள் அனைவரும் உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் பயிற்சி பெற்றிருக்கவேண்டும்.இது தொடர்பான புகார்கள் ஏதும் இருப்பின் 94440 423222 என்ற வாட்ஸ் அப் புகார் எண்ணிற்கு பொதுமக்கள் புகார்களை தெரிவிக்கலாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Updated On: 19 Oct 2022 3:00 PM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...