/* */

தேர்வு‌எழுத வந்த மாற்று திறனாளி மாணவிக்கு பாலியல் தொல்லை

+1 தேர்வில் மாற்றுத்திறனாளி மாணவிக்கு உதவிக்கு நியமிக்கப்பட்ட ஓரிக்கை தனியார் பள்ளி ஆசிரியர் பாலியல் தொல்லை தந்ததாக கைது செய்யப்பட்டுள்ளார் .

HIGHLIGHTS

தேர்வு‌எழுத வந்த மாற்று திறனாளி மாணவிக்கு பாலியல் தொல்லை
X

பாலு செட்டி காவல்நிலையம்.(கோப்பு படம்)

தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில் அரசு பொது தேர்வு குறித்த அட்டவணை கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டு கடந்த இருதினங்களாக +2 , +1 அரசு பொது தேர்வு துவங்கியது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 13917 பேர் பிளஸ் டூ தேர்வினையும், 13114 பேர் +1 தேர்வு எழுதள்ளதாக நிலையில், தேர்வுக்காக 53 தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு பறக்கும் படை தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அனைத்து நபர்களும் நியமிக்கப்பட்டது. நேற்று தமிழ் மொழி தேர்வு நடைபெற்றது.

இதனை எடுத்து இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிளஸ் ஒன் வகுப்பிற்கான அரசு பொதுத்தேர்வு நேற்று காலை 10 மணிக்கு துவங்கியது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 6091 பேர் மாணவர்களும், 7023 மாணவிகளும் என 13 ஆயிரத்து 114 பேர் 53 தேர்வு மையங்களில் தேர்வு எழுதுகின்றனர்.

தேர்வு எழுத வந்த மாணவ மாணவிகளுக்கு முதன்மை தேர்வு கண்காணிப்பாளர் அரசு பொது தேர்வு நன்னடத்தை விதிமுறைகளை மாணவர்களுக்கு எடுத்து கூறினார். இதனை எடுத்து தேர்வு துவங்கவதற்கு முன் தேர்வு அறிக்கை சென்ற மாணவர்களை பரிசோதனைக்கு பின்னே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் மாற்றுத்திறனாளிகள் தேர்வு எழுத சிறப்பு அனுமதி பெறப்பட்டு அவர்களுக்கென அவர்கள் சொல்வதை எழுத ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அவ்வாறு திருப்புட்குழி அரசு மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில் பிளஸ் ஒன் அரசு பொதுத்தேர்வு நடைபெற்றது. இதில் முசரவாக்கம் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண் பிளஸ் ஒன் தேர்வு அரியர் தேர்வு எழுத வந்துள்ளார்.

அந்த மாணவிக்கு என தனி அறை ஒதுக்கப்பட்டு தேர்வு எழுதி வந்த நிலையில், பதட்டத்துடன் காணப்படுவதாக கூறியதை தொடர்ந்து தேர்வு அலுவலரான ஓரிக்கை தனியார் பள்ளி ஆசிரியர் அந்த மாணவிக்கு உதவ வந்துள்ளார்.

இந்நிலையில் தேர்வு எழுத சென்ற போது ஆசிரியர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அம்மாணவி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார் அதன் பேரில் அவர்கள் காவல் நிலையத்தில் இது குறித்து தெரிவித்துள்ளனர்.

உடனடியாக இதுகுறித்து பாலு செட்டி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததின் பேரில் அங்கு சென்று காவல்துறையினர் மாணவி மற்றும் ஆசிரியரிடம் தனி தனியாக விசாரணை மேற்கொண்டனர்.

இதன்பின் இது குறித்து அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டதன் பேரில் ஆய்வாளர் உடனடியாக சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு தனியார் பள்ளி ஆசிரியரை கைது செய்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Updated On: 15 March 2023 2:45 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...