/* */

காஞ்சிபுரத்தில் பிரதம மந்திரி விவசாயிகள் செழுமை மையம் துவக்கி வைப்பு

காஞ்சிபுரத்தில் பிரதம மந்திரியின் விவசாயிகள் செழுமை மையம் துவக்கி வைக்கப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் பிரதம மந்திரி விவசாயிகள் செழுமை மையம் துவக்கி வைப்பு
X

பிரதம மந்திரி விவசாயிகள் செழுமை மையத்தினை காஞ்சிபுரம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் இளங்கோவன் திறந்து வைத்தார்.

இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு மாநிலங்களில் கன மழை பெய்து நீர் நிலைகளும் நிரம்பி விவசாயி பணிகள் மிகவும் மும்ரமாக நடைபெற்று வேளாண் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு அதன் மூலம் அதிகளவில் லாபம் கிடைத்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி கொண்டு உள்ளனர்.

இது மட்டுமில்லாமல் வேளாண் பெருமக்களுக்கு மத்திய , மாநில அரசுகள் பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. பயிர் காப்பீட்டு இன்சூரன்ஸ், பி. எம். கிசான் திட்டம் , சேமிப்பு கிடங்குகள் , நேரடி நெல் கொள்முதல் நிலையம், வேளாண்மை உற்பத்தி சார்ந்த கருத்தரங்கங்கள், வேளாண் இயந்திரங்கள் குறைந்த வாடகையில் விவசாயிகளுக்கு அளித்தல், மாதந்தோறும் வட்டார அளவின் பயிற்சி வகுப்புகள் ஆலோசனைகள் புதிய புதிய நெல் ரகங்கள் அறிமுகம், இதேபோல் தோட்ட பயிர்கள் குறித்த கண்காட்சி மற்றும் அதில் வரும் லாபம் குறித்த விவசாயிகளுக்கு விழிப்புணர்வு என பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

இந்நிலையில் பாரத பிரதமர் நரேந்திர மோடி இன்று தீபாவளி வருவதையொட்டி விவசாயிகளுக்கு பி.எம். கிசான் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும் நிதி கணக்கில் வரவு வைக்கப்படும் நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார்.

இதேபோல் அனைத்து வேளாண் இடுப்பொருட்கள் மற்றும் அதனை சார்ந்த சேவைகளை ஒரே இடத்தில் விவசாயிகளுக்கு வழங்க பிரதம மந்திரி விவசாயிகள் செழுமை மையம் என துவங்கப்படும் என அறிவித்து அதனையும் இன்று துவக்கி வைத்தார்.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து வேளாண் இடுபொருட்கள் மற்றும் அது சார்ந்த சேவைகள் அனைத்தையும் ஒரே இடத்தில் விவசாயிகளுக்கு வழங்குவதற்கான விவசாயிகள் சேவை மையம் காஞ்சிபுரத்திற்கு தேர்வு செய்யப்பட்டது.

இதன் அடிப்படையில் காஞ்சிபுரத்தில் விவசாயிகள் சேவை மையம் தொடங்கப்பட்டது. காஞ்சிபுரம் வணிகர் வீதியில் இம்மையத்தை மாவட்ட வேளாண்மைத்துறை இணை இயக்குநர் எம்.இளங்கோவன் திறந்து வைத்து முதல் விற்பனையையும் தொடக்கி வைத்தார்.

பின்னர் அவர் பேசுகையில் மத்திய அரசு நாடு முழுவதும் 600 சேவை மையங்களை திறந்திருப்பதாகவும், காஞ்சிபுரத்தில் திறக்கப்பட்டுள்ள மையத்தில் விவசாயிகள் தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவையான இடுபொருட்கள்,வேளாண் மருந்து வகைகள் ஆகியனவற்றை பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.

இதன் மூலம் விவசாயிகளுக்கான அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் ஒரே இடமாக இது விளங்கும் எனவும் தெரிவித்தார். சேவை மைய திறப்பு விழாவிற்கு மதராஸ் பெர்டிலைசர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் துணை மேலாளர்கள் எம்.ராஜா, எஸ்.கே.எம்.ஆசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவில் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள்,உர விற்பனையாளர்கள்,விவசாயிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Updated On: 17 Oct 2022 2:00 PM GMT

Related News

Latest News

  1. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  3. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  4. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  5. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  6. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  7. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!
  8. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  9. வீடியோ
    Pakistan-ல் Rahul ஆதரவாளர்கள் அட்டகாசம் | புலம்பும் மூத்த Congress...
  10. குமாரபாளையம்
    குடிநீர் ஆதாரம் குறித்து நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்