/* */

மதுபான விலை உயர்ந்தது -நடுரோட்டில் அமர்ந்து புலம்பிய குடிமகன்

இன்று முதல் மதுபான விலை ரூ10 - ரூ80 வரை விலையேற்றம் ஆனது. இதற்காக வருந்திய மதுபிரியர் போதையில் சாலை நடுவே அமர்ந்து புலம்பினார்.

HIGHLIGHTS

மதுபான விலை உயர்ந்தது -நடுரோட்டில் அமர்ந்து புலம்பிய குடிமகன்
X

மணிமங்கலம் - கரசங்கால் சாலையில் மதுபோதையில் சாலையின் நடுவே அமர்ந்து அட்டகாசம் மதுபிரியர்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் தனியார் மதுபான ஆலைகளில் இருந்து கொள்முதல் செய்து அரசு மதுபானக் கடைகளில் மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் தமிழக அரசுக்கு ஆண்டுதோறும் 37 ஆயிரம் கோடி ரூபாய் சராசரி வருமானம் கிடைக்கிறது.

இந்நிலையில் இன்று முதல் அரசு மதுபான கடைகளை மதுபானங்களின் விலை ரூபாய் 10 முதல் ரூபாய் என்பது வரை விலை உயர்த்தப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது. இதன் மூலம் 15% லாபம் கிடைக்கும் என்பதும் இதனுடைய விலை பட்டியல் இன்று காலை கடை விற்பனையாளர் மற்றும் மேலாளர்களுக்கு அளிக்கப்பட்டு இன்று முதல் அமலுக்கு வந்தது. குடிமகன்கள் பலருக்கு விலை உயர்வு குறித்த தகவல்கள் தெரியாததால் வழக்கம் போல் விற்பனையாளர்களிடம் சில மணி நேரம் சில வாக்குவாதங்களும் நடைபெற்றது.

இந்நிலையில் மணிமங்கலம் அரசு மதுபானக் கடைக்கு வழக்கம் போல் வந்த மதுபிரியர் காசு கொடுத்த போது கூடுதல் விலை கேட்டதால் புலம்பியபடியே பணத்தை கொடுத்து மது வாங்கி குடித்தார், அத்துடன் மணிமங்கலம் - கரசங்கால் சாலையில் நடு பகுதியில் அமர்ந்து புலம்ப தொடங்கினார் .

விலைவாசி போல மதுவும் விலை உயர்வு கண்டதும் , சைடிஸ் காசினை விலை உயர்வுக்கு சரியா போச்சா என மதுபோதையில் கூறியபடியே நடு சாலையில் அமர்ந்து புலம்பிக் கொண்டிருந்தார். அவ்வழியே வந்தவர்கள் அங்கு மது அருந்திய நபர்கள் தலைவா வா தலைவா.. போலீஸ் புடிச்சுனு போயிடும் என பலர் அவரிடம் கூறியும் நடுசாலையிலே அமர்ந்து இருந்த நிலையில் அவ்வழியாக சென்ற வாகனங்கள் மெதுவாக அவரை கடந்து சென்றது.

சிறிது நேரம் கழித்து அவரே சாலையிலிருந்து விலகி மரம் அருகே சென்று படுத்துக் கொண்டார். கடந்த இரண்டு வருடங்களாக எந்த ஒரு வருமானமும் கூலி தொழிலாளிகளுக்கு இல்லாத நிலையில் தற்போது மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிய நிலையில் மதுபான விலை உயர்வு பல நடுத்தர குடும்பங்களை சிக்கலை ஏற்படுத்தும் என கூறி வருகின்றனர்.

Updated On: 7 March 2022 4:15 PM GMT

Related News

Latest News

  1. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  2. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  3. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  4. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  5. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  6. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  7. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  8. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  9. வீடியோ
    மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு !பாஜக நிர்வாகியால் முதல்வர்...
  10. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...