/* */

பழுதடைந்துள்ள வேகவதி ஆற்றின் தரை பாலத்தை சீரமைக்க ஆட்சியரிடம் கோரிக்கை மனு

தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்ட அமைப்பாளர் பொன்மொழி தலைமையில் பெரியார் நகர் அருகே வேகவதி தரைப்பாலத்தை தடுப்பு சுவர் உடன் சீரமைக்க கோரிக்கை வைத்தனர்

HIGHLIGHTS

பழுதடைந்துள்ள வேகவதி ஆற்றின் தரை பாலத்தை சீரமைக்க ஆட்சியரிடம் கோரிக்கை மனு
X

வேகவதி ஆற்றின் குறுக்கே உள்ள தரை பாலத்தை சீரமைக்க கோரி தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்ட அமைப்பாளர் பொன்மொழி தலைமையில் மனு அளிக்க வந்த பொதுமக்கள்

காஞ்சிபுரம் மாநகராட்சியில் முக்கிய பிரதான ஆறாக விளங்கும் வேகவதி ஆற்றின் இரு கரைபுறமும் பொதுமக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் வடகிழக்கு பருவமழை போது வேகவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல்வேறு இடங்களில் தரைப்பாலம் உடைந்து பொதுமக்கள் வசிக்கும் பகுதியிலிருந்து வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சின்னகாஞ்சிபுரம் பெரியார் நகர் அருகே பச்சைப்பன் ஆடவர் கல்லூரியில் பின்புறம் உள்ள முருகன் குடியிருப்பு, பல்லவா நகர், வரதராஜா நகர், கணேஷ் நகர் உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்ட நெசவாளர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இதில் 3500 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர் தினந்தோறும் அப்பகுதியில் இருந்து அத்தியாவசிய தேவைக்காகவும் வேலைக்காகவும் பொதுமக்கள் சென்று வரும் முக்கிய பிரதான வழியாக இருக்கும் தரைப் பாலத்தை சீரமைக்க கோரி பலமுறை மனு கொடுத்து நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்நிலையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்ட அமைப்பாளர் பொன்மொழி தலைமையில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கலைசெல்வியை சந்தித்து சேதம் அடைந்த காலத்தை சீரமைக்கக் கூடிய தடுப்புச் சுவர் இல்லாமல் ஆபத்தான நிலையில் இருப்பதால் விரைந்து நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மேலும் பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் மூத்த குடிமக்கள் இவ்வையாக செல்லும்போது ஆபத்துடனே செல்லும் நிலை ஏற்படுவதாகவும் இரவு நேரங்களில் இது மிக ஆபத்தாக நேரிடும் என்பதால் விரைந்து மாவட்ட நிர்வாகம் செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்ததாக இக்குழு தெரிவிக்கப்பட்டது.

Updated On: 27 Nov 2023 11:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...