/* */

வீட்டு மனை பட்டாவை கிராம பதிவேட்டில் பதிவு செய்ய கிராம மக்கள் மனு

அரசு வழங்கிய வீட்டுமனை பட்டாவை பதிவு செய்து தரக்கோரி குடியிருப்பு வாசிகள் காஞ்சிபுரம் ஒன்றிய குழுத் தலைவரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

HIGHLIGHTS

வீட்டு மனை பட்டாவை கிராம பதிவேட்டில் பதிவு செய்ய  கிராம மக்கள் மனு
X

அரசு வழங்கிய பட்டாவை கிராம பதிவேட்டில் பதிவு செய்ய காஞ்சிபுரம் ஒன்றிய குழு தலைவர் மலர்கொடி குமாரிடம் அப்பகுதி குடியிருப்புவாசிகள் கோரிக்கை மனு அளித்தனர்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அடுத்த திருப்பருத்திகுன்றம் ஆதி திராவிடர் குடியிருப்பு அமைந்துள்ளது. கடந்த 50ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வந்த 46குடும்பங்களுக்கு கடந்த 1997ல் கீழ்கதிர்பூர் கிராம புல் எண்193ல் அனுமந்த பட்டா அரசு மூலம் வழங்கப்பட்டது.

ஆனால் இதுநாள் வரை கிராம வட்ட கணக்குகளில் " அ " பதிவேட்டில் மேற்கண்ட புலன் எண் பதிவேற்றம் செய்யாமல் உள்ளது.

இதுகுறித்து கடந்த பத்தாண்டுகளாக மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் உள்ளிட்டோருக்கு பல்வேறு குழுக்கள் இது சம்பந்தமாக அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டுகின்றனர்.

மேலும் 46 பெண்களுக்கு அரசு வழங்கிய பட்டாவை கிராம மட்ட கணக்கு பதிவேட்டில் பதிவு செய்து நிரந்தர பட்டா வழங்க வேண்டும் என இன்று அப்பகுதிக்கு வந்த காஞ்சிபுரம் ஒன்றிய குழு தலைவர் மலர்கொடி குமாரிடம் அப்பகுதி குடியிருப்புவாசிகள் கோரிக்கை மனு அளித்தனர்.

இந்த நிகழ்வின் போது காஞ்சி திமுக ஒன்றிய செயலாளர் பி. எம் .குமார், ஒன்றிய துணை செயலாளர் தசரதன், ஊராட்சி மன்ற தலைவர் மலர்ராமசந்திரன், ராமமூர்த்தி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Updated On: 7 Jan 2022 9:30 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    உடுமலையில் தண்ணீரின்றி வறண்ட பஞ்சலிங்க அருவி; ஏமாற்றத்தில் சுற்றுலா ...
  2. திருப்பூர்
    திருப்பூர்; 4 மையங்களில் 'நீட்' தேர்வெழுதிய மாணவ மாணவியர்
  3. ஆன்மீகம்
    சாய்பாபாவின் காலமற்ற ஞானம் - ஒரு வழிகாட்டும் ஒளி!
  4. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது!
  5. லைஃப்ஸ்டைல்
    ‘நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே...’
  6. லைஃப்ஸ்டைல்
    புலிக்கு வாலாக இருப்பதைவிட எலிக்கு தலையாக இரு..!
  7. லைஃப்ஸ்டைல்
    கர்ப்பம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  8. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 14 அரசு பள்ளிகள் உள்பட 60...
  9. நாமக்கல்
    நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம்...
  10. லைஃப்ஸ்டைல்
    யாரையும் நம்பாதே: சிறந்த 50 தமிழ் மேற்கோள்கள்!