/* */

தடை செய்த பிளாஸ்டிக் பொருட்கள் விற்றால் அபராதம்: ஆட்சியர் எச்சரிக்கை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏப்ரல் 1 முதல் தடை செய்த பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

HIGHLIGHTS

தடை செய்த பிளாஸ்டிக் பொருட்கள் விற்றால் அபராதம்: ஆட்சியர் எச்சரிக்கை
X

மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி. 

ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் மீதான தடை அறிவிப்பை, தமிழக அரசு 25.06.2018 நாளிட்ட அரசாணை எண் 84ல் வெளியிட்டது.

இதன்படி ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் கோப்பைகள், அனைத்து அளவிலான மற்றும் தடிமன் கொண்ட பிளாஸ்டிக் கைப்பைகள், நெய்யப்படாத பிளாஸ்டிக் கைப்பைகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித தட்டுகள், பிளாஸ்டிக் டம்ளர்கள், தெர்மாகோல் கோப்பைகள், உணவுப் பொருட்களை கட்ட பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தாள்கள், தண்ணீர் பைகள்/பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள் மற்றும் பிளாஸ்டிக் கொடிகள் போன்றவை தயாரிக்கப்படுவதும், சேமித்து வைப்பதும், விநியோகிப்பதும், போக்குவரத்து செய்வதும், விற்பதும், உபயோகிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளன.

மேலும் இதை தீவிரமாக கண்காணிக்க மாநகராட்சி/நகராட்சிகள்/பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் தனித்தனியே குழுக்கள் அமைக்கப்பட்டு, பகுதி வாரியாக திடீர் ஆய்வுகள் மேற்கொள்வார்கள். அவ்வாறு தமிழக அரசால் தடைசெய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்தல், சேமித்து வைத்தல், போக்குவரத்து செய்தல், விநியோகித்தல், விற்பனை செய்தல் மற்றும் உபயோகப்படுத்துதல் போன்றவை இக்குழுவால் கண்டறியப்பட்டால் ரூ.100 முதல் ரூ 1லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி எச்சரித்துள்ளார்.

Updated On: 30 March 2022 1:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  2. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  3. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  4. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  5. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  6. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  7. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  8. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  9. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...
  10. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!