/* */

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அறுவடை துவங்கியதால் நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உத்திரமேரூர் , காஞ்சிபுரம் பகுதியில் அரசு நேரடி கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு வருகிறது.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அறுவடை துவங்கியதால் நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு
X

உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அவளூர் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தைத் திறந்து வைத்த சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த நவம்பர் டிசம்பர் மாதங்களில் பெய்த கனமழை காரணமாக மாவட்டம் முழுவதும் உள்ள நீர்நிலைகள், ஏரிகள், ஆறுகள் என அனைத்தும் நிரம்பி வழிந்தது.

இதனால் மகிழ்ச்சி அடைந்த விவசாயிகள் காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் பயிரிட்டு விவசாயத்தை மேற்கொண்டு வந்தனர்.

தற்போது கடந்த ஒருவார காலமாகவே நெல் அறுவடை துவங்கியதால் அரசின் நேரடிக் கொள்முதல் நிலையங்களில் விரைவாக திறக்க விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

அவ்வகையில் களக்காட்டூர் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்த மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி மாவட்டம் முழுவதும் விவசாயிகள் தேவைக்கு ஏற்ப 80க்கும் மேற்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என அறிவித்தார்.

இந்நிலையில் இன்று உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் அவளூர் இப்பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்து கொள்முதலை துவக்கி வைத்தார்.

இதேபோல் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம். பி எழிலரசன் விஷால், பெரும்பாக்கம், தாமல், முட்டவாக்கம் ஆகிய பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் பணிகளை துவக்கி வைத்தார்.

மேலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் வேலை உறுதி அட்டை வழங்கும் பணியினை தொடங்கி வைத்ததார்.

இந்நிகழ்வின் போது ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் சங்கரிகுமார், ஊராட்சி மன்ற தலைவர் சித்ராபாபு, ஒன்றிய செயலாளர் குமணன், ஒன்றியக்குழு பெருந்தலைவர் மலர்கொடிகுமார், ஒன்றிய குழு துணைத் தலைவர் திவ்யபிரியா இளமது மற்றும் ஸ்டாண்டர்டு ஏழுமலை, செந்தமிழ்ச் செல்வன், ஆசூர் கன்னியப்பன் , ஊராட்சிமன்ற தலைவர் தயாளன் , அங்கம்பாக்கம் தினகரன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 28 March 2022 9:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்