/* */

காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியில் இதுவரை 8க்கும் மேற்பட்ட நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
X

கீழ்கதிர்பூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லின் தரத்தை ஆய்வு செய்த காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் பெய்த கனமழையால் மாவட்டம் முழுவதும் ஒரு லட்சம் ஏக்கர் விளை நிலங்களில் நெல் பயிரிடப்பட்டது.

தற்போது அறுவடை காலம் துவங்கி விட்டபடியால் காஞ்சிபுரம் மாவட்ட நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் 83 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் விவசாயிகளின் நலனுக்காக திறக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தெரிவித்தார்.

அவ்வகையில் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் கடந்த 3 நாட்களில் இதுவரை 8 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் துவைத்து வைத்துள்ளார்.

காஞ்சிபுரம் அடுத்த கீழ்கதிர்பூர் மற்றும் விலாப்பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து வைத்த காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் கொள்முதல் செய்யப்பட்ட நெல்களின் தரம் மற்றும் விலை குறித்து கேட்டறிந்தார்.

விவசாய மாவட்டம் என பெயர் பெற்ற காஞ்சிபுரம் விவசாயிகள் கடந்த பருவத்தில் அதிக அளவு விவசாயத்தில் ஈடுபட்டதும், அதன் விளைவாக பல்வேறு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் குவிந்து வருகிறது.

இந்நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய செயலாளர் பி.எம்.குமார் , மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் நித்யா சுகுமார், ஒன்றியக் குழுத் தலைவர் மலர்கொடி குமார் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Updated On: 5 April 2022 12:45 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவு
  2. லைஃப்ஸ்டைல்
    ஏசி இல்லாமல் கோடையை எப்படி சமாளிக்கலாம்? சில டிப்ஸ்
  3. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கும்ப ராசிக்கு எப்படி இருக்கும்?
  4. மதுரை
    வைகை ஆற்றில் கலக்கும் அரசு மருத்துவமனை கழிவுநீர்! பொதுப்பணித்துறை...
  5. சேலம்
    மேட்டூர் அணையில் நீர் திறப்பு 1,400 கன அடியாக அதிகரிப்பு
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 142 கன அடியாக குறைவு
  7. தமிழ்நாடு
    செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு. ரயில்வே...
  8. லைஃப்ஸ்டைல்
    அண்ணன் தங்கை பாச கவிதைகள்!
  9. லைஃப்ஸ்டைல்
    காலை வணக்கம் கவிதைகள்...!
  10. லைஃப்ஸ்டைல்
    காதலுக்கு எல்லைகளோ, தூரங்களோ கிடையாது !