/* */

ஊராட்சிகளில் அனுமதியின்றி விளம்பர பதாகைகள் வைத்தால் ஓராண்டு சிறை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாநில நெடுஞ்சாலைகளில் மற்றும் ஊராட்சிகளில் அனுமதியின்றி பேனர்கள் வைக்கப்படுகிறது.

HIGHLIGHTS

ஊராட்சிகளில் அனுமதியின்றி விளம்பர பதாகைகள் வைத்தால் ஓராண்டு சிறை
X

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்விமோகன்.

அனுமதி பெறாமல் வைக்கப்படும் விளம்பர பலகைகள் , பதாகைகள் மற்றும் விளம்பர தட்டிகள் ,அட்டைகள் அகற்றுவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வெளியிட்ட செய்தி குறிப்பில் ,

அனுமதி பெறாமல் வைக்கப்படும் விளம்பர பலகைகள் , பதாகைகள் மற்றும் விளம்பர தட்டிகள் , அட்டைகள் அகற்றுவது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் கடந்த 02.06.2023 அன்று தொடர்புடைய துறை அலுவலர்களின் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் நடத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் விளம்பர பலகைகள் , பதாகைகள் அனுமதி பெறாமல் நிறுவப்பட்டிருப்பதை அகற்றுவது தொடர்பாக பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன. கிராம ஊராட்சி பகுதிகளில் விளம்பர பதாகைகள் நிறுவ-தமிழ்நாடு ஊராட்சிகள் (விளம்பர பதாகைகள் நிறுவ உரிமம் வழங்குதல் மற்றும் அது தொடர்பான விளம்பர வரி விதித்தல்) விதி, 2009 ல் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

மேற்படி விதிகளை பின்பற்றி கிராம ஊராட்சி பகுதிகளில் விளம்பர பலகைகள் / பதாகைகள் /தட்டிகள் நிறுவ மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு முறையாக விண்ணப்பித்து அதற்கான அனுமதி பெற வேண்டும்.மாவட்ட ஆட்சியர் அனுமதி பெறாமல் ஊராட்சி பகுதிகளில் விளம்பர பலகைகள் , பதாகைகள் , தட்டிகள் நிறுவும் பட்சத்தில் அவை சட்டத்திற்கு புறம்பாக நிறுவியதாக கருதப்பட்டு மேற்படி விதி 9-ன் கீழ் சம்பந்தப்பட்ட ஊராட்சியால் உடனடியாக அகற்றப்படும்.

விதிகளுக்கு புறம்பாக அனுமதி பெறாமல் வைக்கப்படும் விளம்பர பலகைகள் , பதாகைகள் , தட்டிகள் தொடர்பாக மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ரிட் மனு எண்.33819/2018, 30233/2011 மற்றும் 7304/2006 ஆகிய ரிட் மனுக்களில் வழங்கிய தீர்ப்பாணைகளின் படி உள்ளாட்சி அமைப்புகள் காவல் துறை ஒத்துழைப்புடன் உடனடியாக அகற்றப்பட வேண்டும்.

காவல் துறையினர் அனுமதி பெறாமல் விளம்பர பலகைகள் , பதாகைகள் , தட்டிகள் வைத்த நபர்கள் நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். விளம்பர பலகைகள் , பதாகைகள் , தட்டிகள் அனுமதியின்றி வைக்கப்படுவதை தடை செய்தல், மீறி வைக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் , நிறுவனங்கள் மீது The Tamil Nadu Open Places (Prevention of Disfigurement) Act 1959 பிரிவு 4-ன் கீழ் நடவடிக்கைகள் எடுத்தல்.

ஊராட்சி பகுதிகளில் நடைபெறும் திருமணம், காதணி விழா, பொது நிகழ்ச்சிகள் ஆகியவைகளுக்கு பதாகைகள் , தட்டிகள் அனுமதியின்றி நிறுவப்பட்டால் ஊராட்சி நிர்வாகம் காவல்துறை ஒத்துழைப்புடன் அகற்றப்பட வேண்டும்.ஊராட்சி பகுதிகளில் அரசுக்கு சொந்தமான இடங்களில் உரிய அனுமதி பெறாமல் நிறுவப்படும் விளம்பர பலகைகள் , பதாகைகள் , தட்டிகள் உடனடியாக அகற்றப்பட்டு தொடர்புடைய நபர்கள்/நிறுவனங்கள் மீது காவல்துறை மூலம் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும்.

ஊராட்சி பகுதிகளில் அனுமதியின்றி விளம்பர பலகைகள் , பதாகைகள் , தட்டிகள் நிறுவிய நபர்கள் , நிறுவனங்கள் மீது சட்டப்படி அபராதம் அல்லது ஓராண்டு சிறை தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.

Updated On: 27 Jun 2023 5:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் தரும் முருங்கைக் கீரை சூப் செய்வது எப்படி?
  2. உலகம்
    இன்னலுறும் நோயாளிகளுக்கு உதவும் செவிலியரை போற்றுவோம்..! நாளை செவிலியர்...
  3. வீடியோ
    🔴LIVE : பள்ளிக்கரணை ஆணவக்கொலை வழக்கு பற்றி மூத்த வழக்குரைஞர்...
  4. ஈரோடு
    ஈரோட்டில் பள்ளி வாகனங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
  5. நாமக்கல்
    நாமக்கல் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் 100...
  6. லைஃப்ஸ்டைல்
    ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு டீ ஸ்பூன் நெய் : உடம்பு குறைய இது
  7. நாமக்கல்
    மோகனூர், பரமத்தி பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகள்: ஆட்சியர் ஆய்வு
  8. ஈரோடு
    பவானி பகுதியில் 15 கிலோ அழுகிய பழங்கள் பறிமுதல்
  9. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை
  10. ஈரோடு
    ஈரோட்டில் பள்ளி ஆசிரியையிடம் நகை பறித்த இருவர் கைது