/* */

நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க விவசாயிகள் 'நெல் கொட்டி' போராட்டம்..!

உத்திரமேரூர் அடுத்த பெருங்கோழி ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க உத்தரவு பிறப்பித்தும் , உபகரணங்கள் தரவில்லை என குற்றச்சாட்டை தெரிவித்தனர்.

HIGHLIGHTS

நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க விவசாயிகள் நெல் கொட்டி போராட்டம்..!
X

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்காததை கண்டித்து நெல் கல கொட்டி போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்ட போது

உத்திரமேரூர் அருகே பெரும் கோழி கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்காததை கண்டித்து, அறுவடை செய்த நெல்லை சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டு நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் கிராம மக்கள் அறிவித்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் தாலுக்காவிற்கு உட்பட்ட பெருங்கோழி ஊராட்சியில் பொதுப்பணித்துறை ஏரிகளும், ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏரிகளும் என நான்கு ஏரிகள் இங்கு அமைந்துள்ளது.

இந்த ஏரிகளின் நீர் பாசனத்தில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்களில் நெல் பயிர் பயிரிடப்பட்டு உள்ளது.நெல் பயிரிட்டுள்ள விவசாயிகள் பெருங்கோழி கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை அமைத்துத் தர வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதுகுறித்து வேளாண்மை துறை அதிகாரிகளும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகளும் ஆய்வு மேற்கொண்டு விட்டு பெருங்கோழி கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க உத்தரவையும் வழங்கி உள்ளனர். இந்நிலையில் தங்கள் பகுதியில் தான் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என நினைத்து சுமார் ஒன்றரை லட்சம் மதிப்பீட்டில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கும் இடத்தை தேர்வு செய்து சீரமைப்பு பணிகளையும் செய்து உள்ளனர்.

மேலும் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்லை கொண்டு வந்து குவியல் குவியிலாக கொட்டி வைத்துள்ளனர். இந்நிலையில் தற்பொழுது பெருங்கோழி கிராமத்திற்கு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க அனுமதி தராமலும் அதிகாரிகள் காலம் கடத்தி வருகின்றனர்.

மேலும் விவசாயிகளோ,விளை நிலங்களோ அதிகம் இல்லாத வேறு ஒரு கிராமத்தில் 2 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க அனுமதித்து உள்ளனர். இதுகுறித்து அறிந்த பெருங்கோழி கிராம விவசாயிகள் 50க்கும் மேற்பட்டோர் பெருங்குழி கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை அளித்துள்ளனர்.

கிராமம் முழுவதும் அறுவடை தொடங்கி உள்ள நிலையில் விரைவாக தங்கள் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து விவசாயிகளுக்கு உதவிட வேண்டும் என கோரிக்கையினை விடுத்தனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் கிராம விவசாயிகள் கோரிக்கைகளை பரிசீலனை செய்யாமல் உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட பெருங்கோழி கிராம விவசாயிகள் அறுவடை செய்த தங்கள் நெல்லை சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்ற தங்களது கோரிக்கை நிறைவேறாத பட்சத்தில், நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்காமல் புறக்கணிக்கப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.மேலும் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரங்களும் கொண்டு வர அனுமதிக்க மாட்டோம் என்றும், தேர்தல் அதிகாரிகளை உள்ளே விடமாட்டோம் என்றும் தெரிவித்துள்ளனர்.

Updated On: 4 April 2024 11:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?